அஜித் குமார் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு சினிமாவில் தனக்கென்று ஒரு அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்.
சமீபத்தில் அஜித் அவர்கள் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார் அப்போது அவரைக் காண வந்த ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள் காவலர்கள் அந்த நேரத்தில் அஜித் நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் என்னுடைய ரசிகர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது என்று காவலர்களிடம் தெரிவித்து விட்டு மாடியில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து முத்தம் கொடுத்தார்.
அஜித் அன்பு முத்தத்தை பெற்ற ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அஜித் எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் அதன்பின் நேரம் இருந்தால் என் படத்தைப் பாருங்கள் என்று ரசிகர் மன்றத்தையே கலைத்தவர்.
இளமையாக தான் நடிக்க வேண்டுமா சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிக்க முடியாதா என்று தனக்கென்று ஒரு ஸ்டைல் அமைத்துக் கொண்டு இன்றும் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அஜித்தை தல என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள் இனி அஜித் என்று அழையுங்கள் அல்லது அஜித் குமார் என்று அழையுங்கள் தல என்ற பெயர் சொல்லி அழைக்க வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டார் அஜித்.
அஜித்தை பற்றி சக நடிகர்களிடம் கேட்டால் அவர் ஒரு ஜென்டில்மேன் என்கிறார்கள் சினி வட்டாரத்தில் அந்த அளவிற்கு மனிதன் அனைவரிடமும் தன்மையாக பழகி உள்ளார்.
அஜித் திரையுலகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்து உள்ளது அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் அஜித் குமார் என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க அவருடைய பழைய வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைதளத்தில் வைரல் செய்து வருகிறார்கள்.
அதில் அஜித் தனது மகளின் கையைப் பிடித்துக்கொண்டு ஏர்போர்ட்டில் அன்பாக அழைத்துச் செல்லும் விடீயோவின் பின்னணியில் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் போட்டு ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அஜித் அனோஷ்கா செம கியூட்ல.