நடிகை வேதிகா தமிழில் ராகவா லாரன்ஸ் ‘முனி’, சிம்புவின் ‘காளை’, பாலாவின் ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நடிகை வேதிகா.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘கஜானா’ படத்தில் நடித்து வருகிறார்.
வேதிகா சமீபத்தில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஒரு முறை கொரோனா தொற்று வந்தால் மறு முறை வராது என்று நினைக்க வேண்டாம். எனக்கு உடல் வலி மற்றும் காய்ச்சல் இருந்தது. எங்கு சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள். நான் சீக்கிரம் குணம் அடைவேன் என்று கூறி இருந்தார்.
கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்த பின் ஓய்வுக்காக வெளிநாடுகள் சென்று வரும் வேதிகா சமீபத்தில் மாலத்தீவு சென்று அங்கு உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்கி மாலத்தீவை சுற்றி வருகிறார்.
நீச்சல் குளத்தில் குளிப்பதையும் மற்றும் நீச்சல் உடை அணிந்து ஜம்முனு குளிக்க செல்லும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை.