அசோக் செல்வன் எதார்த்தமான நடிப்பு ஸ்மார்ட் ஹீரோ. பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் அசோக் செல்வன் செம அழகா இருக்கிறார் எப்படி அவர் கீர்த்தியை தேர்ந்து எடுத்தார் என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
அசோக் செல்வன் இதற்கு பதில் கொடுக்க சமீபத்தில் ஒரு பேட்டியில் ஏன் கருப்பான பெண்ணை திருமணம் செய்ய கூடாதா நாங்கள் காதலித்தோம் திருமணம் செய்து கொண்டோம் இதில் என்ன கருப்பு வெள்ளைனு கேட்டு இருந்தார். அது போல கீர்த்தி பாண்டியன் என்னை பத்தி எது வந்தாலும் என்னை பாதிக்காது என்று கூறி இருந்தார் அந்த பேட்டியில்.
சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்து வெளியாக உள்ள கண்ணகி படத்தின் ப்ரோமோஷன் நடந்தது. வழக்கமாக ஏதாவது குதர்க்கமாக கேள்வி கேட்டும் பயில்வான் ரெங்கநாதன். படக்குழுவினரிடம் கண்ணகி நல்லவளா இல்லை கெட்டவளா என்று கேட்டு வந்தார் அதன் பின் கீர்த்தி பாண்டியனிடம் வீட்டுக்குள்ள தான் கணவன் மனைவி சண்டைனா இந்த வாரம் உன் படம் வருது உன் கணவர் படம் வருது இதுலையுமா என்று பயில்வான் கேட்க அதற்கு கீர்த்தி எங்க வீட்டுக்கு நீங்க வந்து பாத்தீங்களா நாங்க சண்டை போடாத என்று நோஸ் கட் செய்தார்.
கணவன் மனைவி சண்டை என்பது இயல்பு. அதுவும் அடுத்தவர் குடும்ப பிரச்சனையில் பயில்வான் தலையிடுவது நாகரிகம் இல்லை. பயில்வான் ரெங்கநாதன் எங்கு சென்றாலும் இது போன்று ஏடாகூடமான கேள்விகளை கேட்டுவருவது தவறு என்கிறார்கள் சினி வட்டாரத்தினர் சற்று கோபத்தில் உள்ளனர்.