ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் இளசுகளை கொக்கி போட்டு இழுத்த நடிகை. முதல் படத்திலே அம்மணி லிப்லாக் காட்சியில் நடித்து ஆச்சரியப்படுத்தியது மட்டும் அல்லாமல் அக்கட தேசத்தில் MOST WANTED நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.
அனிமல் படத்தில் அந்த காட்சி:
சமீபத்தில் ராஷ்மிகா நடித்து வெளியான அனிமல் திரைப்படம் தான் ஒட்டு மொத்த பாலிவுட் பேச்சு. ராஷ்மிகா லிப்லாக் மட்டும் அல்ல சில அரைகுறை காட்சிகளிலும் நடித்து இருந்தது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. அனிமல் படத்தில் ரன்பீர்கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மிகுந்த வரவேற்பை பெற்று ரூ.734 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.
ராஷ்மிகாவை பின்தொடரும் ரசிகர்கள்:
இதையொட்டி மார்க்கெட் மேலும் உச்சத்தை அடைந்துள்ளது. நல்ல கதையம்சம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஷ்மிகா இன்ஸ்டாகிராமிலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். அவருக்கு 40.5 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
ரஷ்மிக்காவின் சேலையின் விலை?
ராஷ்மிகா பெரும்பாலும் சேலை அணிவதில் அதிக ஆர்வம் காட்டி வருவார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் சேலை தான் என்னுடைய ‘கிரஸ்’ என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது சேலை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த சேலையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். பிரபல டிசைனரான SAWAN GANDHI சேலையை வடிவமைத்துள்ளார். ராஷ்மிகா அணிந்துள்ள சேலை புகைப்படம் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா-2′ படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி திரைக்கு வர உள்ளது.