லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் MOST WANTED DIRECTOR. சமீபத்தில் விஜயை வைத்து லியோ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற லியோ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்பொழுது லோகேஷ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.

அதற்கு முன் சொந்தமாக GSQUAD என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். தற்பொழுது லோகேஷ் தயாரிப்பில் உறியடி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் FIGHT CLUB என்ற படத்தின் ப்ரோமோசனில் பிஸி ஆக இருக்கிறார் லோகேஷ்.

இந்நிலையில் திடீர் என்று லோகேஷ் கனகராஜின் facebook பக்கத்தில் Viral yoga என்று பக்கத்தின் பெயர் மாற்றப்பட்டு ஆபாச வீடியோக்களை அப்லோட் செய்யப்பட்டு இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் செம ஷாக்கில் இருந்தார்கள். லோகேஷ் பக்கத்தில் எப்படி இது போன்ற வீடியோக்கள் என்று குழம்பி போய் இருக்க இந்த விஷயம் லோகேஷ் காதுக்கு செல்ல பதறி அடித்து போய் விளக்கம் ஒன்றை கொடுத்து உள்ளார் லோகேஷ்.

அதில் நான் x மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கணக்கு வைத்து உள்ளேன். வேற எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் என்னுடைய கணக்கு இல்லை. தயவு செய்து போலி கணக்குகளை பின்தொடர வேண்டாம் என்று விளக்கம் கொடுத்து உள்ளார் லோகேஷ்.