இளையதளபதியாக சினிமாவிற்கு வந்து தளபதியாக மாறி தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வந்தவர் விஜய். விஜயிடம் அரசியல் ஆசை உண்டா என்று 12 வருடத்திற்கு முன்பே போட்டியாளர் ஒருவர் கேட்க அதற்கு ஆசை இருக்கு அதற்கான நேரம் வரும் போது நிச்சயம் வருவேன் அதற்கான நேரம் இப்போது இல்லை என்று இருந்தார்.
தற்பொழுது விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் சூட்டி உள்ளார். இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு பெரிய செல்வாக்கு உள்ளதால் ரசிகர்கள் விஜயின் அரசியல் வருகையை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் திரை உலகிற்கே பெரும் அதிர்ச்சி ஒன்றை கொடுத்து உள்ளார். அரசியலுக்கு வருவதால் கமிட் ஆன மேலும் ஒரு படத்தை முடித்து கொண்டு முழு நேரம் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள போவதாக கூறி இருந்தார்.
விஜயின் அரசியல் வருகை சந்தோசத்தை கொடுத்தாலும் தற்பொழுது மாபெரும் வசூல் செய்யும் படம் என்றால் விஜய் படம் தான் விஜய் ஒருவேளை சினிமாவை விட்டு முழுமையாக நின்றால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வசூல் குறையும் என்று புலம்பி வருகிறார்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள்.
விஜய்யோ அரசியல் மற்றொரு தொழில் அல்ல புனிதமான சேவை அதனால் தான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை என்று உறுதியாக இருக்கிறாராம்.
விஜயின் கடைசி படத்தை நல்ல அரசியல் கலந்த கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரது நலம் விரும்பிகள் கூறி வருகிறார்களாம். விஜய் செய்ய போகும் அரசியலின் தொகுப்பாக அந்த கதையை உருவாக்கி படமாக எடுத்து வெளியிட்டால் விஜய் அரசியல் வாழ்க்கையில் எதை நோக்கி செல்ல இருக்கிறார் என்ற தெளிவு மக்களுக்கு கிடைக்கும் என்றும் ஐடியா கொடுத்து வருகிறார்களாம் நலம் விரும்பிகள். விஜய் தரப்பு அட்லீ , கார்த்திக் சுப்ராஜ் மற்றும் H வினோத்திடம் ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல்.
ஒரு வேலை அட்லீ ஏற்கனவே பதிவு செய்து வைத்து உள்ள ஆளப்போறன் தமிழன் என்ற டைட்டில் விஜயின் கடைசி படத்திற்கு வைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள் சிலர்.