Tuesday, December 3, 2024
-- Advertisement--

எல்லாம் முடிஞ்சி போச்சி..!!! தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள் சமந்தாவின் முன்னாள் கணவர்- நாகசைத்னயா

சமந்தா ஆரம்பத்தில் வெல்கம் கேர்ள் ஆக பணிபுரிந்து வந்த நடிகை சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து அதன் பின் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சமந்தா முதல் படத்தில் ரசிகர்கள் கவனத்தில் ஈர்த்தார் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரெக்க கட்டி பறந்த சமந்தா ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்தால் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் அவருடைய மார்க்கெட் எப்படி இருக்கிறதோ அதை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பெரிய அளவில் சமந்தாவிற்கு மார்க்கெட் இருந்தது.

தெலுங்கு வெர்சன் விண்ணைத்தாண்டி வருவாயில் நடித்த சமந்தா நாகசைதன்யா அந்த படத்தின் மூலம் நண்பர்கள் ஆகி அதன்பின் காதலிக்க தொடங்கினர். தங்களது காதலை பெற்றோர்களிடம் சொல்லி திருமணத்தையும் பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.

சமந்தா நடிகை சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டு ஏகப்பட்ட செய்திகள் வந்தாலும் நாக சைதன்யா தரப்பு முதலில் யோசித்தார்கள் அதன் பின் ஒற்றுக்கொண்டார்கள் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தில்.

பிரமாண்டமாக நடந்த இவர்களுக்கு திருமணத்தில் பல லட்சம் ரூபாய்களில் கல்யாண புடவை அலங்காரம் என்று அசத்தியிருந்தார்கள் திருமணமான சில வருடங்களில் சமந்தாவும் நாகசைத்னயாவும் தாங்கள் பிரிவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி ஏன் திடீரென்று பிரிந்தார்கள் என்று விவாதமே நடந்தது.

சிலர் ஃபேமிலி மேன் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடித்த சில காட்சிகள் மோசமாக இருந்தது நாகசைத்னயா குடும்பத்தினர் அதில் நடிக்க வேண்டாம் என்று சொல்லியும் சமந்தா நடித்தார் அதனால் தான் பிரச்சனை என்று கூறினார்கள்.

பலர் இவர்கள் பிரச்சினைக்கு முக்கிய காரணம் பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் என்று கூறினார்கள் அமீர்கான் அவர்கள் நாக அர்ஜுன் அவர்களின் வீட்டிற்கு வந்த நாளில் சமந்தா அவர்களை சந்திக்க வில்லை அதனால் சண்டை பெரிதாக முற்றியது என்று கூறி வந்தார்கள். அது மட்டும் அல்லாமல் அமீர் கான் தான் தான் இருவரையும் பிரிந்துவிட்டார் என்ற செய்தியும் பரவி வந்தது.

அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை விவாகரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கோபமான நாகசைதன்யா கூறும்போது, “எனது சொந்த வாழ்க்கையை பற்றி பேசுவதை கேவலமாக நினைக்கிறேன். நான் ஒரு நடிகன். எனது நடிப்பை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையை பற்றி மற்றவர்கள் பேசுவதை விரும்பவில்லை. சினிமா வாழ்க்கையை விட நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத்தான் பரபரப்பு ஆக்குகிறார்கள் . சினிமா துறையில் நான் சாதித்ததை பற்றி யாரும் பேசுவது இல்லை.

எங்களின் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது. முடிந்து போன அத்தியாயம் நாங்கள் பிரிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டு தான் பிரிந்தோம். இனி சமந்தாவின் வழி அவருடையது அது போல என் வழி என்னுடையது இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தயவு செய்து என்னை இந்த விஷயத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி உள்ளார் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா.

மாலத்தீவில் பிரபல நடிகை காட்டிய தாராளம்…!!! வைரல் ஆகும் பிகினி புகைப்படங்கள்.

 

இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்…!!! திடீர் என்று வெளியான புகைப்படங்கள்.

 

சமந்தா நாகசைத்னயா விவாகரத்திற்கு இந்த பிரபல நடிகர் தான் காரணமாம்…!!! இவரா இப்படி செய்தார்..?

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles