யோகி என்ற படத்தில் நடித்த பாபு தனது பெயரை யோகிபாபு என்று மாற்றிக்கொண்டார். சினிமாவில் பத்தோடு பதினொன்றாக நின்ற நடிகர் பல படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்தார்.
இவர் முதலில் சினிமாவில் நடிக்கும்போது இந்த மூஞ்சி எல்லாம் யார் பாப்பாங்க என்று கேலி செய்த கூட்டத்திற்கு முன் சினிமாவில் தனக்கென்று ஒரு அசைக்க முடியாத இடத்தை நகைச்சுவை நடிகராக இடம் பிடித்தார். இவருடைய படங்களை போஸ்டரில் போட்டு விளம்பரம் தேடிய படங்கள் நிறைய உள்ளது.
ஆரம்பத்தில் இவரை வைத்து உருவ கேலி செய்யும் படங்கள் ரிலீஸானது. அந்தக் கேலிகள் யோகி பாபுவை மேலும் பிரபலபடுத்தியது அதன்பின் நல்ல நல்ல நகைச்சுவை காட்சிகளில் நடித்து தனது நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்திய யோகிபாபு சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முடிவு செய்திருந்தார் அதன்படியே பல கோடி ரூபாய் செலவில் வீடு ஒன்றை கட்டிய யோகி பாபு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது யோகிபாபுவுக்கு விசாகன் என்ற மகனும் உண்டு. யோகி பாபு அவர்கள் தீவிர முருக பக்தர் எங்கே சூட்டிங் சென்றாலும் முருகன் கோவில் இருந்தால் உடனே முருகனை தரிசித்து விட்டு தான் செல்வாராம் அந்த அளவிற்கு பெரிய முருக பக்தர் யோகிபாபு.
தற்பொழுது எக்கச்சக்க படங்களை தனது கைவசம் வைத்திருக்கும் யோகிபாபு சில வருடங்களுக்கு முன்பு ஹீரோவாக நடித்த கூர்க்கா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் பல விருதுகளை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு நகைச்சுவை நடிகர் இதுபோன்ற கதைகளிலும் நடிக்க முடியுமா என்று பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
சமீபத்தில் ஹீரோவாக யோகிபாபு நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் லோக்கல் சரக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியானது தினேஷ் மாஸ்டருடன் யோகிபாபு நடித்திருக்கும் இந்த திரைப்படம் நகைச்சுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. யோகிபாபு நான் ஹீரோவாக நடிக்கவில்லை கதாபாத்திரமாக தான் நடிக்கிறேன் நான் என்றும் நகைச்சுவை நடிகர் தான் என்று திட்டவட்டமாக இருக்கிறார். தொடர்ந்து நகைச்சுவை படங்களில் தான் நடிப்பேன் என்றும் முடிவில் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கும்பகோணம் வந்திருந்த யோகிபாபு அங்கு உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் யானையிடம் ஆசீர்வாதம் வாங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.