சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை. பிரபல நடிகர் நாகார்ஜுன் அவர்களின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா சமீபத்தில் தான் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

சமந்தா விவாகரத்து திரையுலகினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது விவாகரத்துக்கு பின் சில மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட சமந்தா அதன் பின் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

அல்லு அர்ஜுனனின் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த சமந்தாவின் ஓ சொல்றியா மாமா பாடல் மாபெரும் வெற்றியைப் பெற்று பட்டி தட்டி எங்கும் ஹிட்டானது. சமந்தாவின் அந்த நெளிவு சுளிமான நடனத்தை பார்ப்பதற்காகவே தியேட்டர்களில் கூட்டம் கூடியது.

இது ஒரு புறம் இருக்க சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. அதே படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் போட்டி போட்டு நடித்து இருந்தார்கள். கதீஜா கதாபாத்திரத்தில் கிளாமருடன் குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய சமந்தா நயன்தாராவை அக்கா அக்கா என்று கண்சிமிட்டி அழைக்கும் போது தியேட்டரில் விசில் பறந்தது அந்த அளவிற்கு சமந்தாவிற்கு ரசிகர்கள் இருந்தார்கள்.

தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் சமந்தா தற்பொழுது பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். பாலிவுட்டில் அக்ஷய்குமார் உடன் சமந்தா ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் அக்ஷய குமாரும் சமந்தாவும் கலந்து கொண்டார்கள்.

ஒரு ரெட் கலர் டாப்ஸ் பிங்க் நிற பேண்ட் போட்டுக்கொண்டு அசத்தலாக செம ஸ்டைலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சமந்தா. கரண் அவர்கள் இந்த நிகழ்ச்சியின் பிரமோ ஒன்றை சமீபத்தில் ஷேர் செய்துள்ளார். அந்தப் பிரமோவின் ஆரம்பத்திலேயே சமந்தாவை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு நிகழ்ச்சிக்கு வருகிறார் அக்ஷய்குமார்.

அதன் பின் அக்ஷய்குமார் மற்றும் சமந்தாவிடம் சுவாரஸ்யமான சில கேள்விகளை கரண் கேட்க அதற்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தனர். கலகலப்பாக பதில் சொல்லும் அவர்களை நடனம் ஆட முடியுமா கரண் கேட்க சமந்தாவை தூக்கிக் கொண்டு சுற்றி நடனம் ஆடினார் அக்ஷய்குமார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எங்க செல்ல குட்டிய என்னா படுபடுத்துறாரு அக்ஷய குமார் என்று கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வந்தனர்.

சமந்தாவுடன் அக்ஷய்குமார் நெருக்கத்தை பற்றி தான் தற்பொழுது பாலிவுட் வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி டிஸ்டனி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் வியாழக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. தற்பொழுது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.