இரவின் நிழல் நடிகர் பார்த்திபன் இயக்கி நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். பார்த்திபன் படத்திற்கு ரகுமான் இசை என்ற செய்தி வந்ததில் இருந்து இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அப்படி என்ன இந்த படத்தில் இருக்கப்போகிறது என்று பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. உலகில் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்ற பெருமையும் பெற்றது. நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்தப் படத்தில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் நடித்த பவி டீச்சர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். பிரிகிடா என்று அழைக்காமல் பவி என்று இவரை அழைத்து வந்தனர் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் பெரிய வரவேற்பு இவருக்கு கொடுத்தது. சமூகவலைதளத்தில் கூட பவி டீச்சர் ஆர்மி என்றும் பவி ஆர்மி என்று ரசிகர்கள் பக்கங்களை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் பிரிகிடா இரவினில் படத்தில் நிர்வாணக் காட்சி ஒன்றில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது இதுபற்றி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரே ஓபன் ஆக கூறி உள்ளார். உடலில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாண கோலத்தில் எப்படி நடித்தீர்கள் என்று கேட்டதற்கு நான் சேலை அணியும் போது கூட இது சரியாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரண்டு முறை சரி பார்ப்பேன் ஆனால் இந்த கதாபாத்திரம் மிகவும் புனிதமானது ஒரு புனிதமான பெண்ணுக்கு அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது தான் சரியாக இருக்கும் என்று இயக்குனர் பார்த்திபன் சார் எனக்கு புரிய வைத்தார் இதனை எனது பெற்றோர்களிடம் எப்படி சொல்வேன் என்று தெரியாமல் இருந்தேன் பார்த்திபன் சார் எனது பெற்றோர்களைப் பார்த்து புரிய வைத்தார்.

நல்ல கதாபாத்திரம் அந்த கதாபாத்திரத்திற்கு இந்த காட்சி தேவைப்படுகிறது என்ற நிலையில் நானும் சம்மதித்தேன் நிர்வாணமாக நடித்தேன். அந்த காட்சியில் கவர்ச்சி இருக்காது புனிதம் மட்டுமே தெரியும் அதனால் தான் அந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
