Friday, March 29, 2024
-- Advertisement--

இரவின் நிழல் பட நடிகை பவி டீச்சர் பிரிகிடா சர்ச்சை பேச்சு…!!! மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட பிரிகிடா..!!!

இரவின் நிழல் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம்.

வித்தியாசமான திரைப்படம் மக்களால் என்றும் கொண்டாடப்படும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம் வழக்கம் போல ஆக்ஷன் காட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள், பாடல் காட்சிகள் என்று இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை சினிமாவை நம்மை நம்பி பார்க்கும் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டுமென்று பார்த்திபன் எடுத்த முயற்சி தான் இந்த இரவின் நிழல்.

இந்த படத்தில் ஆஹா கல்யாணம் புகழ் பவி டீச்சர் பிரிகிடா நிர்வாணமாக நடித்திருந்தார். பார்த்திபன் இந்த கதாபாத்திரத்தை பிரிகிடா நன்றாக செய்திருந்தார் என்று பாராட்டினார்.

நிர்வாண காட்சியை எடுக்கும் போது டாப்ஸ் ஒன்று அணிந்து கொண்டு சிறிய ஷார்ட்ஸ் அணிந்து இருந்தாராம் பிரிகிடா. ஒரு சேலை அணியும் போது கூட அடிக்கடி சரிசெய்யும் நான் இந்த மாதிரி காட்சியில் நடிக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனால் இந்த கதைக்கு தேவை என்பதால் நான் நடிப்பேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்பொழுது திரையரங்குகளில் இரவின் நிழல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு உள்ளது இந்நிலையில் பார்த்திபன் மற்றும் பிரிகிடா நேரடியாக தியேட்டருக்கு சென்று விசிட் அடித்து வருகிறார்கள் அப்போது தியேட்டர் ஒன்றில் மீடியாவிடம் உரையாடிய நடிகை பிரிகிடா.

இப்ப சேரி பக்கம் போனீங்கன்னா கெட்ட வார்த்தைகள் தான் கேட்க முடியும் அதை மாற்றி நாம் சினிமாவுக்காக ஏமாற்ற முடியாது மக்களுக்கே தெரியும் அங்கே எப்படி பேசுவார்கள் என்று கூறினார். நடிகை இப்படி பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனம் எழுந்தது.

அதிக அளவில் எதிர்ப்புகள் வந்ததால் நடிகை உடனே மன்னிப்பு கேட்டதுடன் இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை நான் கூற வந்தேன் ஆனால் அது தவறான உதாரணம் ஆகிவித்தது மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

பிரிகிடாவின் இந்த பேச்சுக்கு இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனும் மன்னிப்பு கேட்டார். அதில் Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! என்று பதிவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க : வசீகரமான முகத்தோற்றத்தை பெற ஆரோக்கியமான வழி முறைகள் இதோ..!!! TRY பண்ணி பாருங்களேன்.
இதையும் படிங்க : மாடர்ன் உடையில் கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!!! மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles