பிரபல நடிகை ஒருவர் தனது கணவருக்கு பாத பூஜை செய்து புகைப்படம் வெளியிட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு நேரத்தில் கணவர் சொன்ன வாக்கை மீறி மனைவி நடக்க மாட்டார். கணவன் என்ன கூறுகிறாரோ அதை தான் முடிவாக மனைவி எடுப்பார். காலங்கள் மாற மாற அவரவர் உரிமைகளை யாரும் விட்டுக் கொடுப்பதில்லை கணவரும் சரி மனைவியும் சரி விட்டுக் கொடுக்காமல் வாழ்வதே பல பிரச்சினைகளுக்கு காரணம்.
பிரபல நடிகை செய்த விஷயம் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ப்ரணிதா கர்நாடகாவை கொண்ட இவர் அருள் நிதியின் உதயம் கார்த்தியின் சகுனி திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து சூர்யாவின் மாஸ் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகர் ஜெய் நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடித்திருந்த அனிதா கன்னட சினிமாவில் படுபேசியான நடிகை.
போன வருடம் தான் பிரணிதா நித்தின் ராஜ் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமான ப்ரணிதா ஜூன் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
நேற்று பீமா அம்மாவாசை என்பதினால் தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டார். பீமா அம்மாவாசை பார்வதி தேவிக்கு சிவபெருமான் அவருடைய பக்தியை புரிந்து கொண்டு ஆசீர்வதித்த நாள் தான் பீமா அமாவாசை தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் கணவருக்கு பாத பூஜை செய்தால் மனைவிக்கு நீண்ட ஆயுள் எல்லா வளமும் பெறுவார்கள் என்ற சாஸ்திரம் உண்டு.
பீமா அமாவாசையை கொண்டாடி தனது கணவருக்கு பாதை பூஜை செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பிரணிதா. இப்படி ஒரு விஷயம் இருக்கா இது தெரியாம போச்சே என்று புலம்பி வருகிறார்கள்.