தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் தான் தல அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தாலும் இன்றும் அவரை தல அஜித் என்று கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் திருச்சியில் அவருக்கு ஒரு தனி கோட்டையே இருக்கிறது என்று கூறலாம் அந்த அளவிற்கு திருச்சியில் அஜித் ரசிகர்கள் ஏராளம். அஜித் திருச்சி மாநகர கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பில் நாற்பத்து ஏழாவது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கினார்.
பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை இருபத்தி ஐந்தாம் தேதி தொடங்கியது. இதில் 1300 போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள்.
அஜித் 27 -7 -2022 அன்று திருச்சியில் உள்ள ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். அஜித் திருச்சிக்கு வரும் செய்தி கிடைத்தவுடன் ரசிகர்கள் படையெடுத்து குவிய தொடங்கினர். அஜித்தின் வருகைக்கு அவரது ரசிகர்கள் நடனமாடி கோஷமிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அஜித்தை பார்ப்பதற்காக பல இடங்களிலிருந்து துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும் இடத்திற்கு குவிய ஆரம்பித்தனர் அவரது ரசிகர்கள் அஜித் மாடியிலிருந்து தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து முத்தமிட்டார் உடனே அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். கூட்டத்தை கண்ட்ரோல் செய்ய முடியாமல் தவித்தார்கள் சில காவலர்கள் இருந்தாலும் அந்தக் கூட்டத்தை அழகாக கண்ட்ரோல் செய்தார் காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி அவர்கள்.
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி அவர்கள் கூறியிருப்பது ரசிகர்களுக்கு யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் வரக்கூடாது நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நான் செய்கிறேன் என்று கூறி அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பும் கொடுத்தார் இறுதியில் என்னிடம் மட்டும் அல்ல கான்ஸ்டபிள் வரைக்கும் பார்த்து நன்றி தெரிவித்து விட்டு சென்றார். உண்மையிலேயே அஜித் ஒரு நைஸ் ஜெண்டில்மேன் என்று தெரிவித்துள்ளார் காவல் துறை ஆணையர் ஸ்ரீதேவி.