Wednesday, December 4, 2024
-- Advertisement--

சமந்தா நாகசைத்னயா விவாகரத்திற்கு இந்த பிரபல நடிகர் தான் காரணமாம்…!!! இவரா இப்படி செய்தார்..?

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை தற்பொழுது பாலிவுட் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தெலுங்குவில் சமந்தா புஷ்பா பட பாடலுக்கு ஆடி ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார். அதனைத் தொடர்ந்து காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் கதீஜா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து விட்டோம் அடுத்து பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டு உள்ளார் சமந்தா. சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் விவாகரத்து பற்றியும் விவாகரத்துக்கு பிறகு வாழ்க்கை பற்றியும் கூறி இருந்தார் சமந்தா.

சமந்தாவின் விவாகரத்திற்கு பலர் பல விஷயங்களை கூறி வந்தாலும் பாலிவுட் வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி சமந்தாவை நாக சைதன்யாவிடமிருந்து பிரித்தது அமீர் கான் அவர்கள் தான்.

நாகர்ஜுன் அவர்களின் வீட்டிற்கு அமீர் கான் சென்ற போது கூட சமந்தா அவரை வரவேற்க வரவில்லை என்றும் அவர் மீது அவருடைய குடும்பத்தினரே கொஞ்சம் டென்ஷனாக இருந்தார்கள் என்றும் அந்த நிகழ்வு தான் சண்டை முற்றுவதற்கு காரணம் என்றும் கூறி வந்தார்கள்.

அந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல பாலிவுட் சினிமா வட்டாரத்தில் இருக்கும் ஒருவர் நாக சைத்தன்யா சமந்தாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் அமீர் கான் தான் என்றும் அவர் கருப்பு இதயம் கொண்டவர் என்றும் குறிப்பிட்டு உள்ளார். என்னிடம் முழு விவரங்களும் உள்ளது விரைவில் வெளியிடுகிறேன் என்று கூறி இருந்தார்.

KRK அவர்கள் சினிமா விமர்சகர் மற்றும் பாலிவுட் வட்டாரத்தில் நெருக்கமாக இருப்பவர். 5 .1 மில்லியன் நபர்கள் இவரை பின்தொடருகிறார்கள். பிரபலமான இவர் இந்த செய்தியை கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles