KPY பாலா கலக்கப்போவது யாரு இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலாவிற்கு என்று பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பாலா செய்யும் சேட்டைகள் ரசிகர்களால் பெரிதாக ரசிக்கப்பட்டது. விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் KPY பாலா மலைவாழ் மக்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.
KPY பாலா அவர்கள் தான் பிறந்தநாளில் ஏதாவது ஒரு நல்லதை செய்தே ஆக வேண்டும் என்று எண்ணத்தோடு ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். அதன் பின் அவருடைய செயலை பார்த்த ஒருவர் நீங்கள் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது ரொம்ப நல்ல விஷயம். ஈரோடு மாவட்டத்தில் 12 கிராமங்கள் உள்ளது அங்கு வாழும் மலைவாழ் மக்கள் பாம்பு கடித்தாலும் மற்ற விலங்கினால் தாக்கப்பட்டாலும் அல்லது மாரடைப்பு ஏற்பட்டாலும் 18 கிலோமீட்டர் தாண்டி கடம்பூர் சென்று தான் மருத்துவம் பார்க்க முடிகிறது அதற்குள் சிலர் உயிரை இழக்கின்றனர்.
அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைத்தால் இன்னும் உதவியாக இருக்கும் என்று ஒருவர் கூறியுள்ளார். அதனைக் கேட்ட பாலா சில மாதங்கள் கடின உழைப்பை போட்டு பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் கிடைக்கும் சில தொகையை சேர்த்து வைத்து எப்படியாவது அந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாலா என் அப்பா பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். அம்மா வீட்ல இருக்காங்க. இது என்னுடைய தகுதிக்கு மீறியது தான். நான் யாரிடமும் பணம் வாங்கி இதனை செய்யவில்லை நான் சம்பாதித்த என்னுடைய சொந்த காசுல தான் இந்த உதவியை செய்து வருகிறேன்.
இப்படி உதவி செய்யும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது பணம் சம்பாதித்து இதுபோல நிறைய உதவிகளை செய்ய வேண்டும் என்பது எனக்கு ஆசை. இப்போது நான் செய்யும் செயலையை என்னுடைய தகுதிக்கு மீறியது.
நான் சம்பாதிக்கும் காசை சேர்த்து வைத்து இதை செய்து வருகிறேன். இன்னும் எப்படியாவது ஒரு பத்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பேன் கொரோனா காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். அது மட்டுமல்லாமல் தற்பொழுது வழங்கி உள்ள ஆம்புலன்ஸில் மொபைல் ஐ சி யு வசதி செய்யப்பட்டுள்ளது.
நான் சம்பாதித்து இன்னும் மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று பாலா உருக்கமாக பேசி உள்ளார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களே முன் நின்று உதவாத இந்நிலையில் ஒரு தொகுப்பாளராக இருந்து கொண்டு தனக்கு வரும் வருமானத்தில் இது போன்ற நல்ல விஷயம் செய்யும் KPY பாலா அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.