Wednesday, May 8, 2024
-- Advertisement--

துணிவு டிரெய்லரால் ஆட்டம் கண்டுள்ள வாரிசு ..”தல”ன்னா சும்மாவா …??

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள படம் துணிவு. வரும் பொங்கலுக்கு டபுள் ட்ரீட்டாக விஜய் மற்றும் அஜித் நடித்த துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளிவர உள்ளன. இதனால் ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவுவது மட்டுமின்றி பட வெளியிட்டு சம்பந்தமான தியேட்டர் பிரச்சினையும் நடந்து வருகிறது.

அண்மையில் தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவே படத்தை விட பிரம்மாண்டமாக இருந்ததாக கூறப்பட்டது. இதனால் தல நடித்த துணிவு படம் அந்த அளவுக்கு ஹிட் தராது என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்பொழுது புத்தாண்டு தினத்தன்று துணிவு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

துணிவு படத்தில் தல அஜித் வங்கி கொள்ளை சம்பந்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் படம் முழுவதும் கையில் துப்பாக்கியோடு அஜித் சிரித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன. இது முழுக்க முழுக்க வாரிசு கதைக்கு எதிரானது ஏனென்றால் வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்ப படமாக அமைந்துள்ளது.

துணிவு படத்தில் எந்த ஒரு சென்டிமென்ட் காட்சியும் குடும்ப காட்சியும் இடம்பெறவில்லை. இதனால் துணிவு படம் பார்க்க இப்போது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

துணிவு படத்தின் டிரைலரை பார்த்த விஜய், வாரிசு பட ட்ரெய்லர் இன்னும் வெளியாகாத நிலையில் அதை சற்று மாற்றலாம் என்று யோசித்து வருகிறாராம். விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நேரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் வெளியிடப்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பும் மோதலும் வலுப்பெற்று வருகிறது.

ஒரு பக்கம் இரண்டு பேரும் நடிகர்கள் தான் இரண்டு படங்களும் மக்களுக்காக தான் என்று கூறப்பட்டாலும் இதில் யார் பெரியவர் என்று சண்டை இன்று வரை நடந்து வருகிறது. துணிவு பட டிரைலரால் வாரிசு சற்று ஆட்டம் கொண்டுள்ளது என்று கூறலாம். இதனால் வாரிசு ட்ரெய்லரை சற்று மாற்றம் அமைக்கலாம் என்று பட குழு யோசித்து வருகிறது.

இதையும் படிங்க : 2023 எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்..!! ஒரு மேற்பார்வை..!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles