வருகிற 2023 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் தரும் என்பது சிறந்த ஜோதிட கணக்கீடு மற்றும் பகுப்பாய்வுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது. அதன் மேற்பார்வை இதோ..!!
மேஷ ராசி பலன்
இந்த ராசியின் படி ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார ரீதிகள் வலிமையாகும். நிதிநிலைமை செழிக்கும் ஆனால் நீங்கள் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது மாணவர்கள் உயர்கல்விக்காக வெளியூர் செல்வர் .செலவுகள் அதிகரிக்கும் ஆனால் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் ஆண்டு இது.

ரிஷப ராசிபலன்
ரிஷப ராசி பலனின்படி இந்த ஆண்டு உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் சிறந்த தன்மையை கொண்டு வர முயற்சிப்பர். தொழில் ரீதியாக நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சமயப் பணிகளில் நீங்கள் ஈடுபட வாய்ப்பு உண்டு. அரசு நிர்வாகத்திடம் இருந்தும், உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு சிறந்த மாதமாக அமையும்.

மிதுன ராசி பலன்
மிதுன ராசி பலன் படி இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு பலவீனமாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் ஜனவரி மாதத்திற்கு பிறகு உங்கள் பிரச்சனை எல்லாம் நீங்கி பொருளாதார ரீதியாகவும் உடல்நல ரீதியாகவும் நீங்கள் வளம் பெறுவீர்கள். இந்த வருடம் நீங்கள் நேரடியான பண நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது நல்லது .

கடக ராசி பலன்
கடக ராசி பலன் படி இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு சிறந்த பொருளாதார நிலைமை இருக்கும். சொத்து வாங்குதல் விற்பதன் மூலம் நல்ல பொருளாதார பலன் கிடைக்கும். அதே சமயம் காதலில் சில பதட்டங்கள் ஏற்படும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரிய உயரங்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான வெற்றியான ஆண்டாக மாறும்.

சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி படி இந்த ஆண்டு கலவையான பலன்கள் கிடைக்கும். முதல் பாதி சாதகமாக இருக்கும் பிந்தைய பாதி பாதகமாக இருக்கும். எதிரிகள் உங்களை வெல்ல முடியாது மாணவர்கள் சிறந்த அறிவாளியாக காணப்படுவீர்கள். திடீரென்று செல்வம் கிடைக்கும். புனித யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி பலன் படி இந்த வருடம் திடீரென்று சில நல்ல பலன்கள் வரும். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் சென்று வேலை பார்க்க வாய்ப்பு உண்டு மாமியாருடன் நல் உறவு பேணும். கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி பலன் படி இந்த ஆண்டு தொடக்கத்தில் சொத்தை வாங்கும் வாய்ப்பு பெறலாம். பிடித்தமான கார் போன்றவற்றை நீங்கள் வாங்கலாம். உறவை வலுவாக வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கடின உழைப்பு நிறைந்த ஆண்டாக இருக்கும். திருமண வாழ்க்கை மற்றும் வணிகம் வெற்றிகரமாக இருக்கும்

விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி படி இந்த ஆண்டு நல்ல தொடக்கமாக இருக்கும். தைரியமும் வலிமையும் நிறைந்தவராக நீங்கள் இருப்பீர். தொழிலில் ரிஸ்க் எடுத்து முன்னேறுவீர். இடம் மாறுவதற்கான வாய்ப்பு உண்டு. வயிற்று நோய், கல்லீரல், வயிறு தொடர்பான பிரச்சனை வரலாம். வெளியூர் பயண வாய்ப்புகளும் உண்டாகும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி படி, தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் தரும் ஆண்டு. ஆண்டின் தொடக்கத்தில் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உடல் நலம் தொடர்பான பிரச்சனை வரலாம். கல்லீரல் சம்பந்தமான பிரச்சனையும் வரலாம் பிள்ளைகளின் ஆரோக்கியத்தின் மீதும் வளர்ப்பின் மீதும் கவனம் கொள்வது நல்லது. ஆண்டின் இறுதியில் தொழில்ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மகர ராசி பலன்
மகர ராசி பலன் படி சிறப்பான ஆண்டாக இந்த ஆண்டு விளங்கும். நிதி ஆதாயம் கிடைக்கும், சொத்து வாங்குதல், விற்பதன் மூலம் லாபம் அடையும். மாணவர்களாக இருந்தால் கல்வியிலும் நல்ல பலன் தரும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனை இருந்தாலும், உடல் ரீதியான பிரச்சினைகள் வராமல் இருக்கும். தன்னம்பிக்கை குறையாமல் இருப்பது நல்லது.

கும்ப ராசி பலன்
கும்ப ராசி படி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழி திறக்கும். உடல் ரீதியான பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தாலும் போகப்போக உடல் ரீதியில் ஆரோக்கியம் கிடைக்கும். திருமண வாழ்வில் நீங்கள் ஒரு பெரிய படி எடுத்து வைக்க முயற்சி செய்வீர்கள்.

மீன ராசி பலன்
மீன ராசி படி இந்த ஆண்டு ஏற்றத்தாழ்வு நிறைந்த ஆண்டாக இருக்கும். உங்கள் தொழில் உங்கள் குழந்தைகளின் வாழ்நலன் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அனைத்திலும் வெற்றி பெறும். ஆனால் உடல் நலத்தில் சற்று கவனம் தேவை, கால்காயம் , கால் வலி, கண் வலி, அதிக தூக்கம் , எதிர்பாராத செலவு, உடல் உபாதை போன்றவை ஏற்படும் . ஆண்டின் இறுதியில் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினை தீரும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியம் ஏற்படும்.

ராசி பலன்கள் எப்படி இருந்தாலும், நாம் இடம், பொருள், ஏவலின் படி நம் வார்த்தைகளிலும் செயல்களிலும் கவனமாக செயல்பட்டு வருகிற 2023 வெற்றி ஆண்டாக மாற்ற முயற்சி செய்வோம்.