Tuesday, May 7, 2024
-- Advertisement--

விஜயின் வாரிசு படத்தின் கதை இதுதானா…!!! வெயிட்டீங்களே வெறி ஏறுதே குஷியான ரசிகர்கள்..!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர். விஜய் படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்து ரசித்து பார்ப்பார்கள் குறிப்பாக குழந்தைகளை அதிக அளவில் கவர்ந்தவர் விஜய் தான்.

விஜய் படங்கள் வந்தால் நன்றாக கல்லா கட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இன்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு விஜயின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது தற்போது விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தை தான் அனைவரும் பெரிதாக எதிர்பார்த்து வருகின்றனர்.

விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் அதுவும் விஜயுடன் விஜய்க்கு சக போட்டியாளராக கருதப்படும் அஜித் படமும் வெளியாவதால் இந்த பொங்கல் தியேட்டரில் பட்டாசாக இருக்கும் என்கிறார்கள் திரை வட்டாரத்தினர்.

விஜய்யின் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பூ ஜெயசுதா பிரகாஷ்ராஜ் சரத்குமார் பிரபு ஷாம் நிறைய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் விஜய்க்கு பெரிய அளவில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் வாரிசு படத்தில் கதை வெளியாகி உள்ளது.

எந்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையில் ஜாலியாக இருப்பாராம் விஜய். ஒரு கட்டத்தில் விஜயின் வளர்ப்பு தந்தை மரணம் அடைய அவர் நடத்தி வந்த மிக பெரிய நிறுவனத்தின் CEO பதவி விஜய்க்கு எதிர்பாராத விதமாக கிடைக்கிறது. மாபெரும் கோடீஸ்வரர் ஆன விஜய் எப்படி அந்த நிறுவனத்தில் அமர்ந்து எதிரிகளை கையாளுகிறார் என்பதே மீதி கதை என்று பரவலாக தகவல் வந்து உள்ளது.

இந்த படத்தை பொறுத்தவரை விஜய் படத்தில் நாம் எதிர் பார்த்த அனைத்தும் இருக்கும் ஆனால் கடைசி அரைமணி நேரம் நிச்சயம் இந்த படம் எமோஷனல் ஆக கண்கலங்க வைக்கும் என்று கூறி வருகிறார்கள் சினி வட்டாரத்தினர்.

இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஆப்பிள் பெண் பூமிகா…!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles