தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் திரைப்படத்தில் அறிமுகமாகி இளசுகளை கவர்ந்தவர் தான் பூமிகா சாவ்லா. தமிழில் மிகக் குறைவான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் பெரிய ஹிட் திரைப்படமாக இவருக்கு அமைந்தது.
குறிப்பாக பத்ரி, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்கள் பூமிகாவிற்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்ற பாடல் வந்தாலே பூமிகா தான் ஞாபகத்திற்கு வருவார் அதுபோல முன்பே வா அன்பே வா என்ற பாடலில் பூமிகாவின் க்யூட் ரியாக்சன் இன்னும் பல இளைஞர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக இருந்து வருகிறது.
பூமிகா தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் பிசியாக இருந்தாலும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பூமிகா அவர்கள் யோகா கற்றுக் கொடுத்த யோகா டீச்சர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பூமிகாவுக்கு தற்பொழுது ஒரு மகனும் உள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பூமிகா தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்று ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.