Wednesday, July 17, 2024
-- Advertisement--

என்னையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னாங்க உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை ரெஜினா..!!! அதுக்கு OKனா வேலையை ஆரம்பிச்சிடலாம்னு சொன்னாங்க.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா (வயது 32 ) 13 டிசம்பர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வுமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் சைக்காலஜி முடித்த இவர். யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ் கல்லூரியில் சைக்காலஜி மேற்படிப்பையும் படித்து முடித்தார்.

Regina Cassandra in Kanda Naal Mudhal Movie

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி :

அதன் பின் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவருக்கு முதல் முதலாக தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வந்த ரெஜினாவிற்கு தெலுகுவிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. சரியாக வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட ரெஜினா தெலுங்கு தமிழ் என்று தொடர்ந்து நடித்து வந்தார். குறிப்பாக தமிழில் சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டிய ரெஜினா:

Gautham Karthik, Regina Cassandra in Mr Chandramouli Hot Beach Song Images HD

பல படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் சில படங்கள் குறிப்பாக மாநகரம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இவருக்கு ஹிட் படங்களாக தமிழில் அமைந்தது அதனை தொடர்ந்து மிஸ்டர் சந்திர மௌலி என்ற படத்தில் ரெஜினா கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார். ஒரு பாடலின் கவர்ச்சி என்றாலும் அந்த பாடலை PAUSE பண்ணி பார்க்கும் அளவிற்கு ரெஜினா கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

எம்புட்டு இருக்குது ஆசை ரெஜினா:

அதனை தொடர்ந்து சில படங்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்த சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் இடம் பெற்ற எம்புட்டு இருக்குது ஆசை என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் பாடலாக அமைந்தது அதனை தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார். ரெஜினா அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அழுத்தமான கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்திருந்தார்.

ரெஜினாவின் இளமை துள்ளலான நடிப்பை வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் சினி வட்டாரத்தினர்.

என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னாங்க:

இது ஒரு புறம் இருக்க திரையுலகில் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று சமீபத்தில் ஒரு பிரபல மீடியா கேட்ட கேள்விக்கு ரெஜினா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

ஒரு தடவை நான் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது சில பேரிடம் வாய்ப்பு கேட்டு வந்தேன். அந்த நேரத்தில் ஒரு நபர் எனக்கு போன் செய்து நாங்கள் சான்ஸ் தருகிறோம் ஆனா நீங்க அட்ஜஸ்ட் பண்றதுக்கு ஓகே சொன்னா உடனே அடுத்த வேலையை பார்க்கலாம் என்று கூறினார்.

நான் ஏதோ சம்பள விஷயத்தில் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன் அப்போது அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கான அர்த்தம் கூட எனக்கு தெரியாது நான் என் மேனேஜரை பேச சொல்கிறேன் என்று கூறி அந்த போன் கால்லை கட் செய்து விட்டேன் அதன் பின் தான் எனக்கு தெரிய வந்தது அவர்கள் என்னை படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என்று.

இந்த சம்பவம் நடந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இது போன்ற சம்பவங்கள் எனக்கு மட்டுமல்ல சினிமாவில் பல பெண்களுக்கு நடந்திருக்கலாம் சில பெண்கள் சும்மாவே நடக்காததை கதையாக சொல்லலாம் சிலர் பொய் சொல்லலாம் உண்மை எது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று ரெஜினா ஓபனாக பேசி உள்ளார்.

இதையும் படிங்க : கோடிகள் கொட்டியும் நோயினால் தர்மசங்கடத்திற்கு ஆளான சமந்தா…!!! குஷி இசை வெளியீட்டு விழாவில் உருக்கம்..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles