Sunday, May 19, 2024
-- Advertisement--

நயன்தாராவை பங்கமாக கிண்டல் செய்த மாளவிகா மோகனன்..!!! செம பதிலடி கொடுத்த நயன்தாரா..!!!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கதாநாயகி நயன்தாரா, வெள்ளி திரையின் சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று பட்டமளித்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். திருமணம் ஆன பிறகும் நயன்தாராவின் மார்க்கெட் குறையவே இல்லை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு சில நடிகைகளில் நயன்தாரா ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவை பற்றி பல சர்ச்சையான விமர்சனங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாமல் அவர் வேலையை அவர் சின்சியராக செய்து வருவதால் தான் இத்தனை வருடங்கள் ஆகியும் அவர் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு கோலாக்காலமாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஆறு வருடத்திற்கு முன்னரே ரிஜிஸ்டர் செய்யப்பட்டதால் தற்பொழுது வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் நயன்தாரா.

திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் தனது வேலையை தொடர்ந்து மும்முறமாக செய்து வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் பட ப்ரோமோஷன் காக பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதை பிரபல தொகுப்பாளியான டிடி தொகுத்து வழங்கினார்,

அப்போது விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்த மாளவிகா மோகன் சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா படத்தைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அந்தப் பேட்டியில் மாளவிகா மோகன், ” நயன்தாரா படம் ஒன்றில் குழந்தை பிறக்கும் பொழுது எப்படி மேக்கப் போட்டுக்கொண்டு நடிக்க முடியும், ஹாஸ்பிடலில் இருக்கும்பொழுது மேக்கப்புடன் இருப்பார்களா..? ஒரு பெரிய நடிகையாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் நடிப்பதா..? என்று பேட்டி அளித்திருந்தார்.

அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாரா தற்போது அளித்துள்ள பேட்டியில் , ஒரு நடிகை என்னை பற்றி மறைமுகமாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார், கமர்சியல் படத்திற்கும் யதார்த்த படத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பதை அவர் மறந்துவிட்டார் போல, எதார்த்தமான படங்களில் தான் ஒரு காட்சி எப்படி இருக்குமோ அப்படியே காட்சி படம் ஆக்குவார்கள், ஆனால் கமர்ஷியல் படங்களில் கொஞ்சம் கற்பனை கலந்தும் எதார்த்தத்தை மீறியும் தான் இருக்கும் என்பதை அவர் மறந்துவிட்டார். போல” என பதிலளித்து உள்ளார். இந்த பேட்டி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: விஜயின் வாரிசு படத்தின் கதை இதுதானா…!!! வெயிட்டீங்களே வெறி ஏறுதே குஷியான ரசிகர்கள்…!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles