Wednesday, May 1, 2024
-- Advertisement--

உதயநிதியை விட மாஸ் ஹீரோவை களம் இறக்கிய கமல்..!! அட இந்த காம்பினேஷன் நல்லா இருக்கேப்பா …!!

தமிழ் சினிமாவும் அரசியலும் பல நூற்றாண்டு காலமாக பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. எம்ஜிஆர் காலம் முதல் தற்போது இருக்கும் முதலமைச்சர் காலம் வரை இந்திய தமிழ் சினிமாவும் அரசியலும் ஏதாவது ஒரு வகையில் இணைந்து தான் வருகிறது.

தற்பொழுது தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள திரு. மு. க ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் சினிமா ப்ரொடியூசர் ஆக இருந்து, அதன் பிறகு சினிமா நடிகராக உயர்ந்தார். பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.

அப்பா ஆட்சிக்கு வந்த பிறகு முழுக்க முழுக்க அரசியலில் களம் இறங்கியுள்ள உதயநிதி, படங்களில் நடிப்பதை குறைத்து பட விநியோகத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் உலகநாயகன் கமல் அளித்த பேட்டியில் உலகநாயகருக்கு சொந்தமான ராஜ்கமல் ப்ரொடக்சனில் உதயநிதி நடிக்க ஒப்பு கொண்டதாக பேட்டியளித்தார்.

தற்போது உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார் மேலும் இவர் கமல் கமல் புரொடக்ஷனான ராஜ் கமலின் ஒரு படம் நடிக்க இருந்தது ஆனால் உள்துறை அமைச்சர் ஆக திரு. உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பொறுப்பேற்று உள்ளதால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி உள்ளார்.

இதற்கு பதிலாக கமல் வேறு ஒரு ஹீரோவை நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளார். விஜய் சேதுபதி ஏற்கனவே கமலுடன் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து உதயநிதிக்காக வைத்திருந்த கதையை கமல் விஜய் சேதுபதியிடம் கூற, அதற்கு விஜய் சேதுபதியும் ஓகே சொல்லி உள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ தகவல் உடனடி கூடிய விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காம்பினேஷன் மிகவும் நன்றாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிங்க: நயன்தாராக்கு கணவர் முன்னே I LOVE YOU சொன்ன ரசிகர்…!!! அப்செட் ஆன விக்னேஷ் சிவன்..!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles