ஜனனி அசோக்குமார் கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் தமிழ் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். “நண்பேன்டா” என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த ஜனனி அசோக்குமார் விஜய் டிவியின் “மாப்பிள்ளை” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் சென்டிமெண்ட் சீரியல் “மௌனராகம்” என்ற தொடரில் இசை சொல்லித்தரும் டீச்சராக நடித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘செம்பருத்தி” தொடரில் அகிலாண்டேஸ்வரியின் சின்ன மருமகளாக நடித்திருந்தார். செம்பருத்தியில் வில்லத்தனம் நிறைந்த பணக்காரப் பெண் வேடத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜனனி சமீபத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மாமியார் அகிலாண்டேஸ்வரியே மிஞ்சிடமா மேக்கப்பில் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : மிகவும் மலிவான விலையில் விற்கும் தக்காளியை தாக்கிய வைரஸ்..! ஏழைகள் வயிற்றில் பெரிய அடி..!



