மிகவும் மலிவான விலையில் விற்கும் தக்காளியை தாக்கிய வைரஸ்..! ஏழைகள் வயிற்றில் பெரிய அடி..!

மிகவும் குறுகிய காலத்தில் விளையக்கூடிய ஒரு பழம் தான் தக்காளி. இதன் விலை பொதுவாகக் குறைவாகவே இருக்கும், எப்போதாவது தான் இதன் விலை அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெறும் தக்காளியை வைத்து கூட ஒரு வீட்டில் ஒரு நாள் சமையலை முடித்து விடலாம்.

தற்போது இந்த தக்காளி விளையக்கூடியநிலங்களில் ஒரு புதுவித வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள தக்காளிகளை அடையாளமே தெரியாத வைரஸ் தாக்கி வருகிறது. இந்த நோய் பற்றி விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.

அந்த புதுவித நோய் தக்காளி பயிர்களை முன்கூட்டியே பழுக்க வைப்பது அவர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வைரஸ் தக்காளி பழத்தை தாக்கிய உடனே அனைத்து தக்காளிப் பழமும் வெளியில் மஞ்சள் நிறத்திலும், உள்ளே கருப்பு நிறத்திலும் மாறி அதன் பின் வெள்ளை நிறமாக மாறுகின்றது. இதனால் இந்த வைரஸ் நோய்க்கு மூவர்ண வைரஸ் நோய் என பெயர் வைத்துள்ளனர். மேலும் தக்காளி அழத் தொடங்கி செடிகளும் பட்டுபோய்விடுகிறதாம்.

இந்த வைரஸ் மறைவதற்கு ஒரு வருடம் ஆகும். அதனால் இன்னும் ஒரு வருடத்திற்கு அந்த நிலங்களில் தக்காளியை பயிரிட முடியாது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.