இந்தி பட இயக்குனர்களில் முக்கியமானவர் சித்தார்த் ஆனந்த். இவர் தற்பொழுது இந்திய சினிமாவின் ஜாம்பவான் ஆன ஷாருக்கான் மற்றும் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனாவை வைத்து “பதான்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பேன் இந்தியா படமாக ஜனவரி மாதம் வெளிவர உள்ளது.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார் தீபிகா படுகோன். அதற்கு காரணம் இவர் நடித்து வெளிவர உள்ள பதான் படத்தின் ஒரு பாடலில் தீபிகா படுகோன் காவிநிற உடை அணிந்து இருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இவர் இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதாகவும்.

இதனால் இந்துக்கள் மனம் புண்படும் என்றும் இந்த படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும், பதான் படத்தில் இருந்தும் இந்த பாடலை நீக்க வேண்டும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்ட மிஸ்ரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்நிலையில் கத்தார் லூசைல் ஸ்டேடியத்தில் நடந்த அர்ஜென்டினா பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டி தொடரில் உலக கால்பந்தில் 16வது இடத்தில் உள்ள இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் தீபிகா. இந்த போட்டியில் வென்ற அர்ஜென்டினாவுக்கு தங்க கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் காரணமாக தீபிகா படுகோனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. “உலக கோப்பை மூலம் தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் உலகம் அறிகிறது, நிரோட்டம் மிஸ்ரா அலை” என்று தீபிகா படுகோன் ஆதரவாக நெட்டிசன்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
