இந்தியாவில் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. அன்றாட உணவிற்கு கஷ்டப்பட்டு வரும் மக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மது இல்லாமல் தவித்து வந்த மக்கள் கூட்டம் மறுபக்கம் இருக்கிறது. கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்று “SOCIAL DISTANCING ” கடைபிடிக்க சொன்னது அரசு.
நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் படும் அவதியால் குறைந்த நேரம் அனுமதி கொடுத்து கடைகளை திறக்க சொல்லியது அரசு தரப்பு. மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடும் இடங்களில் மட்டும் தடை பிறப்பித்து இருந்தார்கள்.
இதையும் படிங்க: சந்தானத்தின் முதல் படம் இந்த இறந்த நடிகரின் படமா…!!! முதல் படத்திலே செம அழகாக இருக்கும் சந்தானம் புகைப்படங்கள் உள்ளே.
இந்நிலையில் பெங்களூரில் மது வாங்குவதற்காக நீண்ட அளவில் வரிசையில் மக்கள் காத்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பசி பட்டினியில் மக்கள் ஒரு பக்கம் இருக்க மது வாங்க இவ்வளவு மது பிரியர்கள் இருக்கிறார்களே என்று ஆச்சர்யப்பட வைக்கிறது இதோ அந்த வீடியோ.