TRPயில் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இன்றுவரை அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருப்பது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி தொடர் தான். இந்த தொடர் வெற்றிக்கு காரணம் விறுவிறுப்பான கதையும் மற்றும் இந்த தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் தான்.
செம்பருத்தி சீரியலில் நடித்த ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி இயல்பாக நடித்து மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தனர். அகிலாண்டேஸ்வரி,ஆதி, பார்வதி, வனஜா போன்ற கதாபாத்திரங்கள் செம்பருத்தியில் அழுத்தமாக இருந்ததால் தொடர்ந்து இந்த சீரியலைப் பார்த்து வந்தனர் மக்கள்.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/12/sembaruthi-janani-1024x576.jpg)
சமீபத்தில் அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மருமகளாக நடித்த ஜனனி இந்த சீரியலை விட்டு காரணம் ஏதும் சொல்லாமல் திடீரென்று மாற்றப்பட்டார். அதற்கு முன் ஆதி என்ற கதாபாத்திரத்தின் நண்பரான ஷ்யாம் என்பவரை எந்தக் காரணமும் அவருக்கே சொல்லாமல் அவரை தூக்கினார்கள்.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/12/sembaruthi-karthikraj.jpg)
இந்த சீரியலில் ஆதியாக கார்த்திக் ராஜ் என்பவரும், பார்வதியாக ஷபானா என்பவரும் நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று ஆதி பார்வதி எப்படியாவது சேர்ந்து விட மாட்டார்களா என்று எண்ண வைத்து அதன்பின் திருமணமும் முடிந்து அகிலாண்டேஸ்வரிக்கு இந்த விஷயம் தெரிய வந்து ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று ஒரு பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர் ஜீ தமிழ்.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/12/karhtikraj-sembaruthi-1024x538.jpg)
சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஆதி கதாபாத்திரத்தில் இனி கார்த்திக் ராஜ் நடிக்க மாட்டார். இதுவரை இந்த செம்பருத்தி சீரியலில் அவர் கொடுத்த பங்களிப்புக்கும் அற்பணிப்புக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.
இதனைப் பார்த்த செம்பருத்தி சீரியலில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். செம்பருத்தி சீரியலில் முக்கியமாக நன்றாக நடிக்கக்கூடிய வரை தூக்கிவிட்டால் அந்த சீரியலின் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும் என்று கேள்வி கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/12/zee-tamil-statement-1024x1024.jpg)