யோகி பாபு இருவருடைய பெயர் பாபு தான். ஆனால் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் அமீர் ஹீரோவாக நடித்த “யோகி” படத்தில் தான். இன்று யோகிபாபு தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்கள் இடத்தில் தமிழ் சினிமாவில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவருடைய உருவத்தை வைத்து கேலி செய்தவர்கள். இன்று யோகிபாபுவின் வளர்ச்சியை கண்டு வாய் அடைத்து நிற்கிறார்கள். இன்று தமிழில் முன்னணி நடிகர் ஆன நயன்தாராவுடன் டூயட் சாங் பாடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் ஆகிவிட்டார்.

இப்போதெல்லாம் ஒரு கதை எழுதும் போதே யோகிபாபு இந்த இடத்தில் என்ன கவுண்டர் கொடுப்பார் என்று யோசித்து இயக்குனர்கள் கதை எழுதும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். இன்று ஒரு படம் போஸ்டர் வெளியிட்டால் அதில் யோகிபாபு புகைப்படம் கொண்டு வந்தால் அந்த படத்தின் மார்க்கெட்டிங் செய்ய உதவும் என்கிற அளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளார்.
இதையும் படிங்க : மயக்கம் என்ன படத்தின் ஹீரோயினாக நடித்த நடிகையா இது…!!! ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே.

சினிமாவில் நடிப்பதற்கு முன் ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த யோகி பாபு. விஜய் டிவியின் லொள்ளு சபாவில் அவரது வாலிப வயசில் நடித்து இருக்கிறார். அந்த லொள்ளு சபா நிகழ்ச்சி இன்று இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்ப உள்ளனர்.