யாஷிகா ஆனந்த் தமிழ் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வர வேண்டியவர். கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்றுத் தரும் டீச்சராக நடித்து இருந்தார் அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார் குறிப்பாக துருவங்கள் பதினாறு என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற படம் யாஷிகாவிற்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. அந்தப்படம் டபுள் மீனிங் வசனங்கள் கிளாமர் காட்சிகள் என்று இருந்தாலும் இளசுகளை கொக்கி போட்டு இழுத்து வர வைத்தது.
அந்த படத்தின் மூலம் பிரபலமடைந்த யாஷிகா விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார். இதில் SJ சூர்யாவுடன் கடமையைச் செய் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் யாஷிகா.
கடை திறப்பு விழா தொடர் சூட்டிங் என்று படு பிசியாக இருந்த யாஷிகா ஈசிஆரில் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் படு வேகமாக கார் ஓட்டியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் ஈசிஆர் ரோட்டில் உள்ள டிவைடர் மேல் இடித்தது. கார் விபத்துக்குள் ஆன சத்தம் கேட்டவுடன் அங்கு இருந்த மக்கள் ஓடிவந்து காரில் உள்ளவர்களை தூக்க ஆரம்பித்தனர்.
யாஷிகா கார் ஓட்டி வந்ததால் பலத்த அடிபட்டு இருந்தது உடனே அவருடைய நண்பர்கள் மருத்துவமனைக்கு யாஷிகாவை அழைத்து சென்றனர். ஆனால் கார் விபத்துக்குள்ளாகி யாஷிகாவின் உயிர் தோழியான பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
முதலில் பவானி இறந்ததை யாஷிகாவிடம் சொல்லாத நண்பர்கள் யாஷிகா உடல்நலம் தேறி வந்த பிறகு பவானி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் அதன்பின் கதறி அழத் தொடங்கி சில மாதங்கள் பவானியில் நினைவிலே இருந்துள்ளார். பல அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய யாஷிகா சற்று ஓய்வு பெற்று இயல்பு நிலைக்கு திரும்பிய பின் மீண்டும் கடை திறப்பு விழாவிற்கு செல்வது போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுப்பது என்று பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.
இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று யாஷிகாவை தனது காரில் ஏற்றிக்கொண்டு விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர் அப்பொழுது யாஷிகா மற்றும் அவரது நண்பர்களை காப்பாற்றிய மக்களை யாஷிகா சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
விபத்து பற்றி யாஷிகா அந்த மக்களிடம் கேட்டறிந்து கொண்டு மனப்பூர்வ நன்றியையும் அந்த மக்களுக்கு கூறியுள்ளார். அன்பு பரிசுகளையும் கொடுத்து அந்த மக்களிடம் இருந்து கண்கலங்கி விடை பெற்றார்.
யாஷிகா மற்றும் அவரது நண்பர்களை காப்பாற்றிய மக்களும் தமிழ் சினிமாவில் நீங்கள் மேலும் முன்னேறி வர வாழ்த்துக்கள் என்று கூறி வழியனுப்பி வைத்தனர்.