யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தில் மூலம் தமிழ் இளைஞர்கள் மனதில் ஒரு பெரும் இடத்தை பிடித்து உள்ளார். சினிமாவில் முதல் முதலாக அவர் அறிமுகம் ஆனது “கவலை வேண்டாம்” என்ற படத்தில் தான்.
அந்த படத்தில் சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுப்பவராக நடித்து இருப்பார். யாஷிகா ஷாப்பிங் மால் மற்றும் பொது இடத்திற்கு போனாலே ரசிகர்கள் கூட்டம் கூடி யாஷிகாவுடன் செல்பி எடுத்து கொள்வார்கள். யாஷிகாவும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ளுவது அதனை தனது சமூகவலைத்தளத்தில் போட்டு லைக்ஸை அள்ளுவார்.

சமீபத்தில் யாஷிகா பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். யாஷிகா யார் என்று தெரியாதவர்கள் கூட யாஷிகாவை தெரியும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி பிரபலப்படுத்தியது. அதன் பின் கடை திறப்பு விழாவிற்கு யாஷிகாவை அணுகினார்கள் சில தொழிலதிபர்கள். அடிக்கடி எதாவது புகைப்படத்தை போட்டு இளைஞர்களை திக்குமுக்காடா வைக்கும் யாஷிகா. சமூகவலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஒர்கவுட் செய்து தொப்பையை குறைத்து உள்ளாராம். அதனை செல்பி எடுத்து வெளியிட்டு உள்ளார்.