Sunday, May 19, 2024
-- Advertisement--

தல அஜித்தின் வலிமை ட்ரைலரில் இவரை கவனிச்சீங்களா..!!! முதல் படமே அஜித்துடன் வேற லெவல் போங்க.

வலிமை பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமையப் போகும் அஜித்தின் திரைப்படம் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படம் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.

ரசிகர்களும் வினோத் அஜித் கூட்டணியில் படம் எப்படி உருவாகி உள்ளது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் இப்போதைய பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் வலிமை படத்திற்கு 4 மணி காட்சி டிக்கெட்கள் பல இடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது.

சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அஜித்தின் வலிமை படத்தின் டிரைலர் வெளியானது ட்ரெய்லர் ரிலீசான சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.

வெளியான ட்ரெய்லரை வைத்து பார்க்கையில் மதுரையில் ரவுடிகளை பந்தாடும் காவலராக பணிபுரிந்து வருகிறார் அஜீத் மதுரையில் இருந்து திடீரென்று சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கிறது. பைக் ரேசர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அஜித்திற்கு தகவல் செல்ல அதை விசாரிக்கப் போக அதன் பின் தான் தெரியவருகிறது ஒரு பெரிய சாத்தான் கூட்டமே உள்ளது என்பது அதன் பின் வலிமையோடு இறங்கி அஜித் என்ன செய்தார் என்று பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்கள்.

வெளியான ட்ரெய்லரில் அஜித்தின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ட்ரெய்லரை பார்க்கையில் வலிமை கண்டிப்பாக ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிற்கு பெரிய வலிமையை வருடத்தின் முதல் மாதத்திலேயே கொடுக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தில் நடித்த பிரபல சீரியல் நடிகை பற்றிதான் தற்போது இணையத்தில் பேச்சாக இருக்கிறது. யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய சைத்ரா ரெட்டி தல அஜித்துடன் வலிமை படத்தில் நடித்துள்ளார் என்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது கயல் என்ற சீரியலில் நடித்துவரும் சைத்ரா ரெட்டி அஜித்தின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருப்பது சீரியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வலிமை படத்திற்கு பிறகு சைத்ரா ரெட்டி சினிமாவிலும் வலம் வருவார் என்கிறார்கள் சின்னத்திரை வட்டாரத்தினர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles