Saturday, May 11, 2024
-- Advertisement--

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்தவாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா..? சிம்பு வருகைக்கு பின் முதல் எலிமினேஷன்.. ஷாக்கில் ரசிகர்கள்.

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று உள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சியை கசிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

அதோடு பிக்பாஸ் சீசன் 5 முடிந்த கையோடு பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் மூலம் ரசிகர்கள் 24 மணி நேரமும் காணலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறங்கியுள்ளனர்.

அதோடு தொடங்கிய சில நாட்களிலேயே பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணி பங்கேற்றுள்ளனர். அதேபோல் இரண்டாவது சீசனில் இருந்து சாரிக் மற்றும் தாடி பாலாஜி, மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி மற்றும் அனிதா, நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, 5 வது சீசனில் இருந்து தாமரைச்செல்வி, சுருதி, நிருப் மற்றும் அபிநய் ஆகிய பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக நிகழ்ச்சியை காண முடியும். இதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம். மேலும் இந்நிகழ்ச்சியை சிலம்பரசன் சென்ற வாரம் முதல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை கடந்து உள்ளது.

ஆனால் தினமும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் போட்டி நடைபெற்று வருகிறது. வர இறுதி நாட்களில் முதல் நாமினேஷன் சிம்பு பங்கேற்கும் எபிசோடு நடைபெற உள்ளது. அதில் இதுவரை சுஜா வருணி, அபிநய், ஷரீக்,வனிதா ஆகியோர் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற வாரம் சதிஷ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி வைல்ட்கார்டு எண்ட்ரியாக வந்தனர். அதனால் சென்றவாரம் எலிமினேஷன் நடைபெறவில்லை.

மேலும் இந்த வாரம் வெளியான வாக்குகள் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி 3 இடத்தில் பாலாஜி, சினேகன், ஸ்ருதி உள்ளனர். இந்த வாரம் ஸ்ருதி அல்லது சினேகன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles