Monday, May 6, 2024
-- Advertisement--

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவரா..? கடினமான போட்டியாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. அதிச்சியில் ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபிஷேக் என பல்வேறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் அனைவருமே தனித்தனியான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வலுவான போட்டியாளர்கள் என நாம் நினைக்கும் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக எவிக்ஷன் வெளியேறி வருகின்றனர்.

சென்ற வாரம் கொரோனா தொற்று பரவலில் இருந்து குணமடைந்து நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன். இந்த வாரம் நாமினேஷன் வரிசையில் அபிநய், அக்க்ஷரா, அமீர், சிபி, அண்ணாச்சி போன்றவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இருக்க வேண்டுமா இல்லை வெளியேற வேண்டுமா என தீர்மானிப்பது மக்களின் வாக்குகள்தான். இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் டிஆர்பி ரேட்டிங் மேல் பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் இந்த வார நாமினேஷனில் இமான் அண்ணாச்சி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles