Friday, May 3, 2024
-- Advertisement--

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் இவரா.? வெளியான பரபரப்பு தகவல்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபிஷேக், இமான் அண்ணாச்சி என பல்வேறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் அனைவருமே தனித்தனியான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வலுவான போட்டியாளர்கள் என நாம் நினைக்கும் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக எவிக்ஷனில் வெளியேறி வருகின்றனர்.

இந்த வாரம் நாமினேஷனில் பலவித போட்டிகள் நடைபெற்று ஒருவர்பின் ஒருவராக நாமினேஷனில் தள்ளப்பட்டனர். அந்த வரிசையில் அபிநய், ராஜிவ், அக்க்ஷரா, பிரியங்கா, பாவனி, வருண் போன்றவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இருக்க வேண்டுமா இல்லை வெளியேற வேண்டுமா என தீர்மானிப்பது மக்களின் வாக்குகள்தான். இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் டிஆர்பி ரேட்டிங் மேல் பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் இந்த வார நாமினேஷனில் அபிநய் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles