Friday, May 3, 2024
-- Advertisement--

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற உள்ள போட்டியாளர் இவரா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், சின்னபொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி என பல்வேறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

வீட்டில் இருக்கும் அனைவருமே தனித்தனியாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வலுவான போட்டியாளர்கள் என நாம் நினைக்கும் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக எவிக்ஷனில் வெளியேறி வருகின்றனர். இந்த வாரம் கொரோனா தொற்று பரவலில் இருந்து குணமடைந்து நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேறிய நிலையில் இந்த வாரம் வெளியேற 10 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் இருக்க வேண்டுமா இல்லை வெளியேற வேண்டுமா என தீர்மானிப்பது மக்களின் வாக்குகள் தான். இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூவர் அணியாக இருந்த பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் ஆகியோர்களிடையே பிரச்சனை தோன்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வார நாமினேஷனில் அபிஷேக், அபிநய் மற்றும் வருண் ஆகிய 3 போட்டியாளர்கள் குறைந்த வாக்குகளை பெற்று உள்ளனர்.

இந்நிலையில் வயல் கார்டு என்ட்ரி ஆக மீண்டும் மீண்டும் வீட்டுக்குள் வந்த அபிஷேக் தனக்கே உண்டான பாணியில் பல விஷயங்களில் வாய்விட்டு மாற்றிக்கொண்டு இந்த வாரம் அபிஷேக் தான் வெளியே வருகிறார் என கூறப்படுகிறது. நல்ல வாய்ப்பு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் வந்த வேகத்திலேயே மீண்டும் வெளியேறி உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles