Wednesday, September 18, 2024
-- Advertisement--

மெனக்கெடாமல் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழி..!! பிடித்தால் பகிருங்கள்..!!

தற்போது உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். பல உடல் பருமனோடு இருப்பவர்கள் பல பிரச்சினைகளை தன் வாழ்நாளில் அன்றாடம் சந்தித்து வருகின்றனர். ஒரு உடை அலங்காரத்தில் ஆரம்பித்து அவர்கள் பல விஷயங்களில் தங்களை மிகவும் தாழ்மை படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில் உடல் பருமனை குறைக்க பலரும் பல விதமான பயிற்சிகளையும் சிரமங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். சாப்பிடாமல் இருப்பது, கடுமையான உடற்பயிற்சி செய்வது, யோகா, மெடிடேஷன் போன்றவற்றை செய்வது என பல வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.

உடல் எடையை குறைக்க நம்மில் பலரும் பல உடற்பயிற்சிகளை செய்வது, உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவது என பல செய்தும் அதன் பலன் கிடைப்பதில்லை. ஆனால் நம் சமையல் பொருட்களில் மணமிக்க உணவுப் பொருளான சீரகத்தை பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம்.

சீரகத்தைத் தண்ணீருடன் சேர்த்து குடித்து வருவதன் மூலம் உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க ஜீரக தண்ணீர் பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெனில் சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. எப்படி உடல் எடையை குறைக்க ஜீரக தண்ணீர் உதவுகின்றது என்பது பின்வரும் செய்தி மூலமாக நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்த பிறகு அதனை இறக்கி அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அரை குளிர வைத்து தினமும் குடித்து வர வேண்டும் . மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால் அதனை குறைப்பதற்கு பலரும் பலவிதமான மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள் ஆனால் சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் அது இயற்கையிலேயே பசியை அடக்கும்.

ஜீரக தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட் களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும். நவீனமான இந்த வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம் காற்று மாசுபாடு , காஸ்மெடிக் பொருள்களால் டாக்ஸின்கள் உடலில் எளிதாக நுழைந்துவிடும். ஆனால் ஜீரக தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுத்து விடும்.

தினமும் காலை நாம் காபி குடிப்பதற்கும் மாறாக இந்த சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும். சீரக தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கு இது வழிவகுக்கிறது. இதன் மூலம் உடல் நலம் சீராகி ஆரோக்கியமாகவும் மாறும்.

சீரக தண்ணீரின் மருத்துவ குணம் அறிந்த கேரளத்து மக்கள் அன்றாட குடிநீர் ஜீரக தண்ணீர் தான். இதன் மகத்துவத்தை அறிந்த நீங்களும் இன்றிலிருந்து இந்த சீரகத் தண்ணீரை குடிக்க அதன் பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles