விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினி ரம்யா. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் மிகவும் புகழ் பெற்றார். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
ரம்யா அப்ரஜித் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார். இந்நிலையில் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது பிசியாக உள்ளார்.
மேலும் இவருக்கு பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன, மாசு என்கிற மாசிலாமணி , ஓகே கண்மணி, ஆடை போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்த இவர் தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிக்கு இவர் அடிமை என்றும், அந்த காட்சியை தற்போது டிக் டாக் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்ஸில் பதிவிட்டுள்ளார்.