சின்னத்திரை சீரியலில் பிரபலமான நடிகை தான் மகாலட்சுமி சமீபத்தில் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் நடந்த பின் மகாலட்சுமிக்கு இப்படி ஒரு கணவரா என்று அவரை கலாய்த்து பல மீம்ஸ் வெளிவந்தது அதனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத ரவீந்தர் என்னுடைய மனைவிக்கு என்னை பிடிச்சிருக்கு யார் என்ன சொன்னால் எனக்கு என்ன என்று கூறி வந்தார்.
அதன் பின் சில மாதங்களிலேயே மகாலட்சுமி ரவீந்தரை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியது அந்த செய்திகள் உண்மையில்லை என்று இரு தரப்பினரும் மறுத்தார்கள் தற்பொழுது ரவிந்தர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மகாலட்சுமி அவர்களின் கணவர் ரவீந்தர் லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற புரொடக்ஷன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார் சில படங்களையும் தயாரித்துள்ளார். திட கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை காட்டி பதினாறு கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை கூறியுள்ளது என்னவென்றால் பாலாஜி கபா என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் கடந்த 2022 ஆம் ஆண்டு லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற நிறுவனத்தைச் சார்ந்த ரவீந்தர் என்பவர் அறிமுகம் ஆகி நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும் அத்திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி போலியான ஆவணங்களை காட்டி 16 கோடி வரை பாலாஜி என்பவரை முதலீடு செய்ய வைத்து கடைசிவரை திட்டத்தை ஆரம்பிக்காமலும் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்கள்..
தற்பொழுது பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது ரவீந்தர் கைது செய்யப்பட்டு சென்னை எக்மோர் நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
சமீபத்தில் தன் திருமணம் ஆகி ஓர் ஆண்டு நிறைவடைந்ததை சந்தோசமாக கொண்டாடினார்கள் மஹாலக்ஷ்மி ரவீந்தர் ஜோடி.