சின்னத்திரை நடிகை விஜே சித்ரா ஒன்பதாம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கிடைத்த உடனே அவருடன் நடித்த சக நடிகர் மற்றும் நடிகைகள் சித்ராவின் உடல் பரிசோதனைக்கு சென்ற மருத்துவமனையில் கூடினர்.
சித்ராவின் உடலைப் பார்த்து அவருடைய நெருங்கிய தோழிகள் மற்றும் சக நடிகர்கள் கதறி அழுதனர். கண்டிப்பாக சித்ரா இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார் தயவுசெய்து விசாரியுங்கள் உண்மை வெளிவரும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தனர்.
சித்ராவின் இறப்பு திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பெற்று இருந்தார் சித்ரா.
தைரியமான பெண்ணாக இருந்த சித்ரா எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் என்று கேள்வி அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் இருந்து எழ ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் சித்ராவின் கணவர் நல்லவர் கிடையாது என்றும், பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் சித்ராவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வந்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப் பட்டிருந்தாலும் அதனை தொடர்ந்து ஆறு நாட்களாக போலீஸார் சித்ரா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவின் தாயார் திட்டவட்டமாக தனது மகளின் சாவிற்கு அவருடைய கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். சித்ராவின் வழக்கை ஆர்டிஓ விசாரணை நடத்தியது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவரது கணவர் ஹேம்நாத் என்பது உறுதி செய்யப்பட்டு தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை திங்கட்கிழமை இரவு போலீசார் கைது செய்துள்ளார்கள்.
சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் காரணம் என்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.