விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரின் மூலம் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர். துறுதுறுவென்று கலகலப்பாக இருக்கும் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
இளம் வயதிலேயே சித்ராவின் வளர்ச்சி பலரை ஆச்சரியம் அடைய வைத்தது. ஆசைப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான AUDI காரை சித்ரா வாங்கினார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு கூட தனது பெற்றோரின் அறுபதாம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தி மகிழ்ந்தார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சித்ரா டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இளம்வயதில் சீக்கிரமாக பெரிய உயரத்தை தொட்ட சின்னத்திரை நடிகை திடீரென்று தன் உயிரை மாய்த்துக் கொண்டது அனைவராலும் ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது.
தற்பொழுது சித்ராவின் வழக்கு நீதிமன்றத்திற்கு வர இருக்க சமீபத்தில் சித்ராவின் கணவர் ஹேமந்த் தன்னை 4 பேர் சேர்ந்த கும்பல் மிரட்டுவதாகவும் சித்ராவின் மரணத்திற்கு பின்புலத்தில் ADMK கட்சியை சார்ந்த மாஜி எம்எல்ஏ ஒருவர் இருப்பதாகவும் தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வந்தார். உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தால் நான் உண்மைகளை நீதிமன்றத்தில் சொல்வேன் என்று கூறியிருந்த அவர் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க கோரி மனு ஒன்றையும் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்து வந்துள்ளார். சித்ராவின் மரணத்திற்கு காரணம் யார் யார் என்பதை கண்டிப்பாக நீதிமன்றத்தில் சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சித்ராவின் நெருங்கிய தோழியான ரேகா நாயர் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் ஹேமந்த் நல்லவன் இல்லை. சித்ரா இறந்தும் கூட சமீபத்தில் பப்புக்கு சென்று குடித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் பல பெண்களிடம் நெருக்கமாக பழகி வருகிறார் அந்த பெண்கள் ஹேமந்த் பற்றி தெரியாமல் சுற்றி வருகிறார்கள். ஹேமந்த் மிகவும் மோசமானவன். சித்ரா இறப்பிற்கு காரணம் மாஜி MLA என்றாலும் கூறுகிறான் அதெலாம் கிடையாது இவனுக்கும் தொடர்பு உண்டு. சித்ராவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் பெண்கள் இதுபோன்று பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் நான் முன் வந்து நிற்கிறேன்.
சித்ரா ஹேமந்த் அறையில் ஏகப்பட்ட காண்டம்கள் மட்டும் பீர்கள் இருந்தது. ஏற்கெனவே ஹேமந்த் சித்ராவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார் பின் ஏன் அவர்கள் அறையில் இவ்வளவு காண்டம் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர். ஹேமந்த் திருந்தவில்லை தன் மீது ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை சரி செய்ய பேட்டி கொடுத்து நடித்து வருகிறார். என் கிட்ட அவன் பல பெண்களை கட்டிப்பிடித்த படங்கள் முத்தமிட்ட புகைப்படங்கள் இருக்கிறது. அவை அனைத்தும் சித்ரா இறந்த பிறகு சமீபத்தி;ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். திருமணம் செய்து கொண்ட மனைவியை இழந்தவர் இப்படி இருப்பார்களா என்று ரேகா நாயர் கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் சித்ரா நல்லவளா என்று கேட்டால் கிடையாது சித்ரா நிறைய பேரை காதலித்து இருக்கா தண்ணி அடிச்சு இருக்கா அவளுக்கு illegal contacts நிறைய இருக்கு அவளை பிடிக்கலைன்னா நீ ஒதுங்கி போகி இருக்கனும் அவளுக்கு கடவுள் தண்டனை கொடுக்கட்டும். உயிரை எடுக்க நீ யார் என்று கேள்வியை முன் வைத்து உள்ளார்.
இது கொள்ளை தான் என்று அடிச்சி சொல்றதுக்கு காரணம் ஹேமந்த் எனக்கு ஹேமந்த் பற்றியும் தெரியும் அவனது கூட்டாளிகள் பற்றியும் தெரியும். அவர்கள் எல்லாம் எதுக்கும் அஞ்சாதவர்கள். ஹேமந்த் தான் கொள்ளைப்பண்னான என்று கேட்டால் கிடையாது. 20 % சதவீதம் ஹேமந்த் தவறு செய்துள்ளார் என்றால் 80 % சதவீதம் அந்த 4 பேர் காரணம் அவர்களை வெளியில் சொல்ல வேண்டும் ஹேமந்த் என்று தெரிவித்து உள்ளார் ரேகா. சித்ரா மரணம் தற்கொலை இல்லை கொள்ளை தான் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார் சித்ராவின் தோழி ரேகா நாயர்.