Saturday, May 11, 2024
-- Advertisement--

ஆயிரம் இருந்தாலும் அம்மா மாதிரி வருமா…!!! அம்மாவை நினைத்து பெருமிதம் கொள்ளும் VJ அர்ச்சனா மகள்..!!!

VJ அர்ச்சனா 1999 ஆம் ஆண்டு செய்தி வாசிப்பாளராக ஜெயா டிவியில் பணியாற்றினார். அதன் பின் சன் டிவியில் காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

காமெடி டைம் அர்ச்சனா என்று தான் இவரை ஒரு நேரத்தில் அழைப்பார்கள் அந்த அளவிற்கு காமெடி டைம் நிகழ்ச்சி இவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அர்ச்சனா காமெடி டைம் நிகழ்ச்சியில் மிக அழகாக இருப்பார் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அப்போது அதிகம்.

VJ Archana with husband

சமீபத்தில் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா BIGGBOSSல் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் தன் மகள் சராவோடு நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன் அர்ச்சனா அவர்களுக்கு மூளை தொடர்பான அறுவை சிகிச்சை ஒன்று நடந்து முடிந்தது. அதன் பின் சற்று ஓய்வில் இருந்த அர்ச்சனா மீண்டும் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் அர்ச்சனாவின் மகள் சாரா இளம் வயதில் தன்னுடைய அம்மா என்று அர்ச்சனாவின் இளம் வயது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அதனை பார்க்கையில் ரசிகர்கள் அர்ச்சனா ஒரு நேரத்தில் எவ்வளவு அழகா இருந்திருக்காங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் தனது காதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார் அர்ச்சனா அப்போது அர்ச்சனாவின் மகள் தனது அப்பா அம்மாவை உட்கார வைத்து உங்களால் பிரிந்து வாழ முடியுமா என்று யோசியுங்கள் என்று கூறியுள்ளார் அதன் பின்பு இருவரும் மனம் மாறி ஒன்றாக உள்ளதாக தகவல்.

சராவிற்கு எப்பவும் அம்மா மேல அலாதி பாசமாம் அம்மாவின் உடல் நிலை சரி இல்லாத போது கூடவே இருந்து அப்படி பாத்துக்கிட்டாராம். ஏன் அம்மா மேல இவளோ பாசம் என்று சிலர் கேட்க ஆயிரம் இருந்தாலும் அம்மா மாறி வருமா என்று கூறி உள்ளார் அர்ச்சனாவின் மகள் சாரா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles