Sunday, May 19, 2024
-- Advertisement--

சினிமா வாய்ப்புக்காக இப்படி செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி அஞ்சனா..!!!

VJ அஞ்சனா நிகழ்ச்சிகளை தொய்வில்லாமல் தொகுத்து வழங்கும் தொகுப்பாளிகளில் இவரும் ஒருவர். அஞ்சனா சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அஞ்சனாவிடம் பேச வேண்டும் என்பதற்காகவே அந்த நிகழ்ச்சிக்கு கால் செய்யும் ரசிகர்களும் இருந்தார்கள்.

கலகலப்பாக பேசும் அஞ்சனாவிற்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அஞ்சனாவிரற்கும் கயல் படத்தின் ஹீரோவான சந்திரன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். சந்திரமௌலிக்கும் அஞ்சனாவிற்கும் ருத்ரா என்ற மகனும் உள்ளார்.

அஞ்சனா சமீபகாலமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். கொஞ்சம் கூட கிளாமர் காட்டாத அஞ்சனா தற்பொழுது ஒரு கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அஞ்சனாவிற்கு சினிமா ஆசை வந்துவிட்டது போல என்று கூறிவருகின்றனர்.

முன்பெல்லாம் உடல் மீது கவனம் செலுத்தாத அஞ்சனா தற்பொழுது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கவனம் செலுத்தி வருகிறாராம். சமீபத்தில் அஞ்சனா உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியானது. விரைவில் அஞ்சனாவை சினிமாவில் எதிர்பார்க்கலாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles