Friday, April 26, 2024
-- Advertisement--

நடிகர் விஜயின் அலுவலகத்திற்கு மார்க் ஆன்டனி படக்குழுவினருடன் சென்ற விஷால்.. காரணம் என்ன தெரியுமா.

நடிகர் விஷால் தனது மார்க் ஆண்டனி படக்குழுவினர்களுடன் முன்னணி நடிகரான விஜயை நேரில் சந்தித்து உள்ளார். இதனை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மார்க் ஆண்டனி படத்தின் டீஸர் தொடர்பாக விஜயை நேரில் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் ரசிகர்களிடையே மார்க் ஆண்டனி என்றாலே நாம் நினைவுக்கு வருவது பாஷா படத்தில் வில்லனாக நடித்த ரகுவரனை மட்டும் தான் அத்தகைய பெயரை தலைப்பாகக் கொண்ட படத்தை இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, புஷ்பா வில்லன் சுனில், இயக்குனர் செல்வ ராகவன், ரித்து வருமா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் டீசரை நடிகர் விஜயிடம் போட்டுக்காட்டி பட குழுவினர் ஆசி பெற்றுள்ளனர். நடிகர் விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், படத்தின் தயாரிப்பாளர் வினோத் ஆகியோர் நடிகர் விஜயை அவரது புதிய அலுவலகத்தில் நேரில் சென்று டீசரை போட்டுக்காட்டி உள்ளனர்.

அந்த டீசரை பார்த்த நடிகர் விஜய் பட குழுவினருக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அவர்கள் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் பதவித்துள்ளார். அதோடு இன்று காலை விஷால் பதிவிட்ட ட்விட்டர் #ThalapathyVijayforMarkAntony என்ற ஹேர் ஸ்டைக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles