தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு, காதல் படங்களுக்கு உள்ள மார்க்கெட்டும், ரசிகர்களிடையே உள்ள வரவேற்பும் என்றும் குறையாது. அது எந்த கால தலைமுறையாக இருந்தாலும் காதல் குறித்த படங்கள் வெற்றி பெரும்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலும் தூவி அடையும் காதல் கதைகள் தான் வெற்றி பெரும், அதுபோல சில வருடங்களுக்கு முன்பு, திரிஷா,சிம்பு நடிப்பில் இயக்குனர் கௌதவ் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் தான் விண்ணை தாண்டி வருவாயா என்கிற காதல் படம். இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “கார்த்திக் டயல் செய்த எண்” என்கிற குறும்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் திரிஷா விண்ணை தாண்டி வருவாயா படத்தில் அடித்த ஜெர்சி கதாபாத்திரத்தில் , கார்த்திக்குடன் பேசுவது போல் காட்சி உள்ளது.
மேலும் இப்படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில், சிம்பு தான் நடிப்பாரா, இசை அமைப்பாளர் யார் எனபது எல்லாம் உங்களுக்கு சர்ப்ரைஸ் எனவும் கெளதம் வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார்.