Saturday, May 18, 2024
-- Advertisement--

ஆரம்பிக்கலாங்களா.. இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் சாதனை செய்த ‘விக்ரம்’ திரைப்படம்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. நடிகர் கமல் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு வெளியாகியுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த வகையில் உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விக்ரம் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் பான் இந்தியா ரிலீசாக பல மொழிகளில் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழகத்தில் சுமார் 900 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

மேலும் ஹிந்தியில் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், மலையாளத்தில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்கள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பல இடங்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம். முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இரண்டே நாட்களில் உலக அளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனை படைத்துள்ளது. அதேபோல் இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles