கோப்ரா விக்ரம் நடித்து மூன்று வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் மூன்று வருடங்களாக விக்ரமை திரையில் காணாத ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து திரையரங்கிற்கு படையெடுத்தனர். கோப்ரா ரசிகர்களை திருப்திப்படுத்தியாதா இல்லையா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம் வாங்க.
கதை:
பணத்துக்காக வெளிநாடுகளில் அனைத்திலும் முக்கிய பிரபலங்களை குறிவைத்து கொலை செய்கிறார் விக்ரம் ஒவ்வொரு கொலைக்கும் பின் கணிதத்தை பயன்படுத்தி ஆதாரமே இல்லாமல் கொலை செய்கிறார் விக்ரம். கணிதத்தில் அதிகம் ஆர்வம் கொண்ட மீனாட்சி கணிதத்தை மையமாகக் கொண்டுதான் அந்த கொலைகள் நடக்கிறது என்பதை இன்டர்போல் அதிகாரியாக வரும் Irfan Pathanக்கு தெரிவிக்கிறார் விக்ரம் செய்த கொலைகள் அதன் பின்னணி என்று ஒவ்வொன்றாக விசாரித்து கடைசியில் விக்ரம் யார் எதற்காக இந்த கொலைகளை செய்கிறார் என்ற சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கிய விதத்தில் அவருடைய உழைப்பு தெரிந்தாலும் இந்த கதையை இவ்வளவு நீளமா சொல்லனுமா என்று அனைவரையும் சீட்டில் நெளிய வைக்கிறது. படத்திற்கு பெரிய மைனஸ் படத்தின் நீளம் தான். இயக்குனர் படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இந்தக் கோப்ரா கச்சிதமான படமாக அமைந்திருக்கும் ஆனால் அவர் சொல்ல வந்ததை முழுவதும் சொல்ல வேண்டும் என்பதற்காக மூன்று மணி நேரம் வேணாம் வேணாம் என்று சொல்லுமளவிற்கு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் எடுத்துக்கொண்ட கதை வித்தியாசமான கதையாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் சற்று சறுக்கலை சந்தித்து உள்ளார்.

படம் முதல் பாதி எப்படா இன்டர்வல் வரும் என்று எண்ணத்தை உருவாக்குகிறது முதல் பாதி தான் ரொம்ப நீளமா இருக்கும் போல இரண்டாம் பாதியில் நல்ல கதை இருக்கும் என்று எதிர் பார்த்த ரசிகர்கள் இரண்டாம்பாதி ஆரம்பித்து சில மணி நேரங்களிலேயே Tired ஆகிவிடுகின்றன. தயவுசெய்து படத்தின் நீளத்தை குறையுங்கள்.
விக்ரம் முழு படத்தையும் தன்னுடைய தோளில் தூக்கி சுமக்கிறார். காட்சிக்கு காட்சி விக்ரம் மெனக்கெட்டு நடித்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

கேஜிஎப் கதாநாயகி ஸ்ரீநிதி செட்டி கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விக்ரமை உருகி உருகி காதலிக்கும் ஸ்ரீநிதி நடிப்பு ஓகே.
மிர்னாலினி ரவி இடைவேளைக்குப் பிறகு ஒரு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கதைக்கு முக்கியமான கதாபாத்திரம். பார்க்க அழகாகவும் இருந்தார்.
பாடல்களிலும் சரி பின்னணி இசையிலும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை தனித்துவம்.
பிளஸ்:
விக்ரமின் நடிப்பு
பின்னணி இசை
மைனஸ்:
தொய்வான சில காட்சிகள்
படத்தின் நீளம்
அஜய் ஞானமுத்து SCREEN PLAY
Verdict : Average
Rating : 2 .75 / 5