Saturday, May 18, 2024
-- Advertisement--

நம்ம விஜய் சேதுபதியை இப்படி பார்த்து எத்தனை நாள் ஆச்சு..!! ரசிகர்கள் ஏக்கத்தை தீர்த்த விஜய் சேதுபதி..!!!

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் ஹீரோக்களில் ஒருவர் விஜய் சேதுபதி. எம்ஜிஆர்- சிவாஜி கணேசன், ரஜினி- கமல், சிம்பு -தனுஷ், அஜித் – விஜய் என்ற இரட்டை ரசிகர் கூட்டத்தை மாத்தி எல்லா நடிகர்களுக்கும் சம அளவு ரசிகர்கள் உண்டு, தனி நடிகனுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு என மாற்றியவர் விஜய் சேதுபதி.

இவர் பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடித்த இந்த படம் தேசிய அளவில் விருது பெற்றது. அதனைத் தொடர்ந்து கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறி விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் கிடைத்தன.

இவரின் எதார்த்தமான நடிப்பு, திராவிட முகம், தேர்ந்தெடுக்கும் கதை மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். முன்னணி நடிகர் என்றால் ஹீரோவாக மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று டிரெண்டை மாற்றி இவர் குணச்சித்திர வேடம் , வயதான தோற்றம், வில்லன் என பல தோற்றங்களில் பல படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வருகிறார்.

சமீப காலமாக விஜய் சேதுபதி உடல் எடை அதிகரித்து தொப்பையெல்லாம் ஏறி காணப்படுகிறார். இதனால் ரசிகர்கள் பழைய விஜய் சேதுபதியை எப்போது பார்ப்போம் என காத்திருந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை மெலிந்து மிரர் செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. இதனை பார்த்து பழைய விஜய் சேதுபதியை பார்த்த மாதிரி உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles