Saturday, May 4, 2024
-- Advertisement--

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா…!!! கண்கலங்க வைக்கும் வீடியோ.

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான அடையாளம் என்றே சொல்லலாம். ஒரு நேரத்தில் இவரெல்லாம் ஹீரோவாக தாக்கு பிடிக்க முடியுமா என்று பேசியர்கள் முன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து காட்டினார். “இனிக்கும் இளமை” என்று படத்தில் அறிமுகம் ஆன கேப்டன் தளபதி விஜய் தந்தை இயக்கத்தில் “சட்டம் ஒரு இருட்டறை” என்ற படத்தில் நடித்தார்.

vijayakanth with rajini

விஜயின் தந்தை மீது விஜயகாந்த்க்கு நல்ல நட்பு ஏற்பட்டது. சந்திரசேகர் தன் மகனை ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகம் படுத்த “நாளைய தீர்ப்பு” என்ற படத்தை எடுத்தார் அது அவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பின் விஜயகாந்த் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக ஒரு முக்கியமான விஷயம் பேசணும் தம்பி விஜய் உங்களுடன் நடித்தால் மக்களிடம் எளிதாக இடம் பிடிப்பார் என்று கேப்டனிடம் கூறியுள்ளார். உடனே ஒரு சில மணி நேரத்தில் கேப்டன் சந்திரசேகர் அவர்களின் இல்லத்திற்கு சென்று உள்ளார்.

நான் முதல் படம் எடுத்தேன் விஜயை வைத்து அது அந்த அளவிற்கு போகவில்லை. உங்களுடன் விஜய் நடித்து படம் வெளியானால் விஜயின் வளர்ச்சிக்கு உதவும் என்று கேட்டு உள்ளனர். அந்த நேரத்தில் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த கேப்டன் அதனால் என்ன தம்பி என்னுடன் நடிக்கட்டும் என்று சந்தோஷமாக கூறினார். அதன் பின் “செந்தூரப்பாண்டி” படத்தில் விஜயகாந்துடன் விஜய் நடித்து வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அது மட்டும் அல்லாமல் நடிகர் சங்க தலைவராக இவர் இருந்து சிறந்த முறையில் பணியாற்றியவர் . தமிழ் திரையுலகில் நல்ல பெயரை சம்பாரித்த கேப்டன் தற்பொழுது உடல் நிலை சரி இல்லாமல் வெளிநாடுகள் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் அனைவரும் பேச பயப்படும் நேரத்தில் அவர் துணிச்சலுடன் அவரிடம் பேசியது பலரையும் வியப்படைய வைத்தது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை மனதில் வைத்து கொள்ளாமல் உடனே வெளிப்படுத்தும் கேப்டன் தற்பொழுது இந்த நிலையில் இருப்பதை கண்டு ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.

சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா கேப்டன் அவர்களுக்கு Shave செய்து, தலையில் உள்ள முடிகளுக்கு டை அடித்து, கை விரலில் உள்ள நகங்களை வெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ இறுதியில் கேப்டன் குழந்தை போல சிரிப்பார் அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மனசுக்கு கஷ்டமாக இருக்கு இது போல வீடியோ போடாதீங்க அவர் குணம் ஆகி வரும் வரை. கம்பீரமான கேப்டனை பார்த்த எங்களுக்கு இப்படி பார்க்க மனசு வலிக்குது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ இறுதியில் கண்கலங்க வைக்கிறது கேப்டன் உங்கள் உடலை பார்த்து கொள்ளுங்கள். மீண்டு வாங்க என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles