உலகமே எதிர்பாத்து கொண்டு இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் அக்டோபர் 5 தேத்தி வெளியானது . ட்ரைலர் வெளியாகி தற்பொழுது தமிழில் மட்டும் 37 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று உள்ளது. மாபெரும் சாதனை செய்து வரும் லியோ ட்ரைலர் ரசிகர்களால் கொண்டபாட்டு வரும் வகையில் அந்த ட்ரைலரில் இடம் பெற்ற குறிப்பாக விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தை தேவையா என்று பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ராஜேஸ்வரி பிரியா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் ட்ரைலர் வெளியான உடனே பெரிய எதிர்ப்பை தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது (1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? விஜய் என்று கூறிய அவர். என்றும் ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். என்று கூறியதோடு லோகேஷை தகுதியில்லாத இயக்குனர் என்று கூறி இருந்தார்.
ஏற்கனவே விஜய் லியோ படத்தில் சிகிரெட் பிடிக்கும் காட்சியையும் லியோ படத்தின் பாடலில் இருந்து சில வரிகளை நீக்க கோரி குரல் எழுப்பி வந்தார் ராஜேஸ்வரி பிரியா. சென்சார் போர்டு நடவடிக்கை எடுத்து பாடல் வரிகளில் உள்ள சில குறிப்பிட்ட வரிகளை நீக்கியது.
விஜய்க்கு எதிராக எதோ சதித்திட்டம் என்று ரசிகர்கள் கூறி வந்த நேரத்தில் தற்பொழுது அவர் விளக்கம் ஒன்றை கொடுத்து உள்ளார் அதில் நானும் விஜய் அவர்களின் படங்களை சிறு வயதில் இருந்து பாத்திருக்கிறேன். காதலுக்கு மரியாதை படத்தை 5 தடவைக்கு மேல் பாத்திருக்கிறேன். அவருடைய நடனம் ரொம்ப பிடிக்கும் விஜயை என்னுடைய பையனுக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் இது போன்ற கெட்ட வார்த்தையை அவரது படங்களில் பயன்படுத்தினால் அதனை குழந்தைகள் மனதில் அப்படியே எடுத்து கொண்டு அவர்களும் பேச ஆரம்பிப்பார்கள்.
காட்சிக்கு தேவையானது என்றால் அதனை mute செய்து வெளியிட்டு இருக்கலாம். எத்தனையோ நடிகர்கள் இதெல்லாம் செய்கிறார்கள் விஜயை மட்டும் ஏன் குறை சொல்றிங்கனு கேக்குறாங்க ஆன நான் ரஜினி அவர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளேன்.
எனக்கும் விஜய்க்கும் என்ன சொத்து பிரச்சனையா. நான் என் அவரை எதிர்க்க வேண்டும். இன்றைக்கு விஜய் மேல் அதிகம் வெறி கொண்ட ஒரு பெரிய ரசிகர்கள் படை அவரிடம் உள்ளது அதனை விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் வேற எந்த நடிகருக்கும் இல்லை இளைஞர்கள் விஜயை கொண்டாடுகிறார்கள் அவர்களுக்கு விஜய் தப்பான உதாரணமா ஆகிவிட கூடாது. ஒரு சகோதிரியா விஜயிடம் இதை நான் கேட்டு கொள்கிறேன்.
நடிகர் மட்டும் அல்ல எங்கு யார் தவறு செய்தாலும் சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டாலும் ஒரு சமூக ஆர்வலர் ஆக என் குரல் ஒலிக்கும் என்று கூறி உள்ளார்.