Sunday, May 19, 2024
-- Advertisement--

எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா..!!!

விஜய் டிவியில் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் விஜே பிரியங்கா. அவர் முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் உடன் தொகுத்து வழங்கினார்.

பிரியங்கா தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலம் அடைந்தார். அவர் இயல்பாகவே துருதுருவென்றும் நகைச்சுவையுடன் தொகுத்து வழங்குவார். அவர் பெரும்பாலும் மாகாபா ஆனந்த் இணைந்து தொகுத்து வழங்குவார். இவர் தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது.

இவர்கள் இருவருடைய காமினேஷன் மிகவும் ரசிக்கும்படியாக இருக்குமென ரசிகர்கள் கூறுகின்றனர். தொகுப்பாளினி பிரியங்கா திடீரென நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரே மருத்துவமனையில் இருப்பதற்கான காரணத்தை யூ டியூப் வழியாக வீடியோவினை பதிவிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறுகையில் அவருக்கு ஃபுட் பாய்சன் ஆனதாகவும் அதனால் மருத்துவமனையில் உள்ளதாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார்.மேலும் தனக்குத் தானே உற்சாக படுத்தி கொண்டு சோர்ந்து போகாமல் மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளார்.அதேபோல் மருத்துவமனையில் கோவில் டெஸ்ட் எடுத்ததாகவும் அதில் நெகட்டிவ் என்று வந்ததாக அவரே கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள பெட் மிகவும் வசதியாகவும் அவை பிளைட்டில் பிசினஸ் கிளாசில இருப்பது போல பெட் உள்ளதாகவும் கூறியுள்ளார். அவர் மருத்துவமனையில் இருப்பதால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளமுடியாமல் இருப்பதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் மா கா பா ஆனந்த் என்னை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார்.மேலும் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles